Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Velumani

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மட்டுமின்றி, அடிமட்டத் தொண்டர்களும் தவெகவை செல்லத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாற்றத்தை உணர்ந்தாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர் எஸ்.பி.லட்சுமணன்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், ”அதிமுகவில் இருந்து 28 பேரை அழைத்து வருவதற்கான முயற்சியில் வேலுமணி தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

அதிமுகவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
”அதிமுகவில் தலைமைப் பொறுப்புகளில் இருந்த பிரபலங்கள் மற்ற கட்சிகளுக்குச் சென்றிருந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் பெருமளவில் கட்சி மாறுவது இதுவரை அரிதாகவே இருந்தது. செந்தில் பாலாஜி திமுகவுக்குச் சென்றபோது அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் சென்றதைத் தவிர, மற்றவர்களின் கட்சி மாற்றங்களில் இத்தகைய நிலை பெரிய அளவில் காணப்படவில்லை.

ஆனால், தவெக உருவான பிறகு நிலைமை மாறியுள்ளது. கிராமங்கள் வரையிலும் அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணையத் தொடங்கியிருக்கிறார்கள். ஒன்றியச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமின்றி, எந்தப் பதவியிலும் இல்லாத சாதாரண தொண்டர்களும் தவெகவை நோக்கிச் செல்கின்றனர். இந்த அபாயத்தை உணர்ந்தாவது எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்க  எதற்கும் இலாயக்கற்ற தவெக அரசு.. விஜயின் ரெய்டு அஸ்திரமும்.. ஸ்டாலினின் காட்டமான பதிலடியும்!
EPS

அதிமுகவும் தவெகவும் ஒன்றல்ல
அதிமுகவும், தவெகவும் ஒன்றுதான் என்ற வாதம் அரசியல் ரீதியாகப் பொருந்தாது. இரு கட்சிகளும் தனித்தனியாக இருக்கிறார்கள். வாக்காளர்கள் அவற்றுக்கு வெவ்வேறு விதமாக வாக்களிக்கிறார்கள். அதிமுக மீது விமர்சனங்கள் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்பட்டாலும், அந்தக் கட்சிக்கு இன்னமும் கணிசமான வாக்காளர்கள் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள். பணப்பட்டுவாடா இல்லாமலும், பலவீனங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அதிமுகவுக்கு ஆதரவு கிடைப்பது, அக்கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி இன்னும் முழுமையாகச் சிதையவில்லை என்பதைக் காட்டுகிறது.

எனவே, அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான் என்ற அரசியல் வாதத்தைவிட, இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் உண்மையான வேறுபாடுகளையும், தொண்டர்களின் மனநிலையையும் புரிந்துகொள்வது அவசியம்.

Republic Tamil

28 பேரைக் குறிவைக்கும் வேலுமணி
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து 28 பேரை அழைத்து வருவதற்கான முயற்சியில் வேலுமணி ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், இந்த முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு விஜய்யும் தவெகவும் வந்துள்ளது. இதன் காரணமாகவே, அதிமுகவில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலானவர்களை அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  விஜயின் மாஸ்டர் பிளான்.. அதிமுக- திமுகவுக்கு செக்..? பரபரக்கும் பனையூர்..!

இந்த 28 பேர் தொடர்பான இலக்கை நோக்கி வேலுமணி கடந்த இரண்டு, மூன்று நாட்களாகச் செயல்பட்டு வருகிறார். இந்த முயற்சியைத் தடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

வேலுமணியுடன் பேச எடப்பாடிக்கு என்ன தயக்கம்?
அதிமுகவுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும். தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளையும் அரசியல் சவால்களையும் சந்தித்துவரும் ஒரு தலைவருக்கு, இவ்வளவு பிடிவாதமும் ஈகோவும் இருக்கக் கூடாது. வேலுமணியுடன் நேரடியாகப் பேசி, அவருடைய கோரிக்கைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு, சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.

வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு கடிதங்கள் மூலம் தங்களுடைய கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்திருக்கிறார். பல நிர்வாகிகள் இணைந்து கையெழுத்திட்டுக் கடிதங்கள் அளித்துள்ளனர். எனவே, அனைத்துக் கோரிக்கைகளையும் ஒரே நேரத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஒரு கட்டத்திலாவது எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்து பேச வேண்டும்.

eps

தினகரனிடம் இறங்கியவர், வேலுமணியிடம் ஏன் இறங்கக் கூடாது?
டிடிவி.தினகரன் விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒரு கட்டத்தில் இறங்கி வந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் பரஸ்பரம் பேசுவதற்குத் தயாராக இருந்ததால்தான் சில அரசியல் நிகழ்வுகள் சாத்தியமானது. தாராபுரத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தினகரனுக்குக் கிடைத்த வரவேற்பை பார்க்க வேண்டும். ஒரு நாள் நிகழ்வுக்கே இவ்வளவு எழுச்சி கிடைத்திருந்தால், தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்க  "ஃபைலை ஓபன் பண்ணுங்க.. ஜோசியக்காரர் வரணுமா?" – CM விஜய்க்கு நேருக்கு நேர் உதயநிதி விடுத்த 'ஓபன் சேலஞ்ச்'!

தினகரனை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இதைக் கூறவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக போன்ற பெரிய இயக்கம் பிளவுபட்டு அழிந்துவிடக் கூடாது என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறோம்.

அதிமுகவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி இந்தச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்குக் காலம் கொடுத்துள்ள கடைசி வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago