Anbil makesh

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது. மூன்று நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு நவம்பர் 4ம் தேதி மீண்டும் புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அன்பில் மகேஷின் ஜாமீன் மனு, நவம்பர் 5-ஆம் தேதி இருதரப்பு வாதங்களின் முடிவில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால், இந்த ஆண்டு தீபாவளியை அவர் சிறையிலேயே கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் தரப்பு வாதம்
நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர், தன் கட்சிக்காரரைக் காப்பாற்ற மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக 8 மணி நேரமும், கைதுக்குப் பின் போலீஸ் காவலாலும் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் மகேஷ் முழுமையாக ஒத்துழைத்தார். அவர் ஒரு பொறுப்பான முன்னாள் அமைச்சர், சட்டத்திற்கு மதிப்பளிப்பவர், எங்கும் தலைமறைவாக மாட்டார். அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, முறைப்படி எடுக்கப்பட்ட கூட்டு முடிவுகள் மட்டுமே.

வழக்கில் கைதான அரசக்குமாருக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சொல்பவர்களின் வாக்குமூலத்தை வைத்தே மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அரசக்குமார் செய்த தப்புக்கு அன்பில் மகேஷ் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? என வாதிட்டனர்.

இதையும் படியுங்க  "அதிமுக எங்க சொத்து.. தவெக வதந்திக்கு முற்றுப்புள்ளி!" - ஆவேசமாகப் பேசிய எஸ்பி வேலுமணி!

போலீசின் இரும்புக்கரம்
அன்பில் மகேஷுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாமீன் வழங்கிவிடக் கூடாது என்பதில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மிக தெளிவாக நின்றனர். இந்த ஊழல் வழக்கின் முழுப் பின்னணியையும் உடைக்க, அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள முக்கியக் குற்றவாளியான முத்துக்குமாரிடம் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். முத்துக்குமாரிடம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில், அன்பில் மகேஷை மீண்டும் நேருக்கு நேர் அமரவைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்பதால் ஜாமீன் தரக் கூடாது எனக் கூறினர்.

சிறையில் ‘ஜெம்’ கூட்டணி
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்கு அதிரடியாக ஒத்திவைத்தார். “தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டதன் மூலம், அன்பில் மகேஷ் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையைப் புழல் சிறையின் இருண்ட அறையில்தான் கொண்டாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிப் பக்கத்து அறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணியும் இந்தத் தீபாவளியைச் சிறையிலேயே கொண்டாடுகிறார்”

இதையும் படியுங்க  ஆட்சியைக் கவிழ்க்க தயாரான 8 தவெக எம்.எல்.ஏ-க்கள்..! செந்தில் பாலாஜி நெட்வொர்க்கின் பகீர் பின்னணி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *