‘கழுத்தில் கையை போட்டு செல்லமாக குத்தியபடியே போஸ்ட் கொடுக்கும் அன்பில் மகேஷ். ”வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாதா? ஏற்கனவே கைதாகிதான் செல்கிறேன். மீண்டும் மீண்டும் ஏழரையை இழுத்தால் என்ன செய்வது?” என தற்போது கோபத்தில் குத்தும் அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கிறார் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி அனுமதி வழங்கியது ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை சிறையில் அடைப்பதற்காக நள்ளிரவில் 12:30 மணி அளவில் புலர் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். இது குறித்து ஏற்கனவே தகவல் அறிந்து சிறைக்கு முன்பு கூடிய திமுகவினர் போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அதோடு அன்பில் மகேஷை அழைத்து செல்லக்கூடாது என வாகனத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதமும் செய்தனர். அத்தனையையும் சமாளித்து அன்பில் மகேஷை சிறைக்குள் அழைத்து சென்றனர் காவல் துறையினர்.

அப்போது சிறைவாசலில் இருந்து ஒருவரது குரல் மட்டும் தனியாக ஒழித்து அனைவரையும் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க வைத்தது/ ”தலைவரே அன்றைக்கே கரூரிலேயே முடித்து விட்டிருந்தால் இன்றைக்கு நமக்கு இந்த நிலை வந்திருக்குமா?” என ஆவேசமாக கத்தினார். முதலமைச்சருக்கே பகிரங்க கொலை மிரட்டல் விடுப்பது போன்று பேசிய அந்த நபர் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த புழல் போலீசார் மூன்று தனி படைகளை அமைத்து தேடியும் வந்தனர்.
”தலைவரே அன்னைக்கு அவனை கரூர்ல போட்டுருந்தா நீ நிலைமை வந்துருமா? தலைவரே..” என மிரட்டல் விடுத்த அந்த நபரின் குரல் பதிவையும் அன்பில் மகேஷுடன் நெருக்கமானவர்களின் குரல் பதிவுகளையும் திரட்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் வேலூர் மாநகராட்சியின் 12வது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் தான் சிறை வாசலிலேயே எல்லை மீறினார் என்பதை கண்டுபிடித்தனர்.

காட்பாடி, திருநகர், சிந்து கார்டனில் வசித்து வரும் ஜீட்டா சரவணன் திமுகவில் வேலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்மன்ற தலைவராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது அன்பில் மகேஷின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகிறார். அதிலும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் டீட்டா சரவணன் அன்பில் மகேஷுடன் நெருக்கமாகவே காணப்படுவார். இந்த நிலையில்தான் டீட்டா சரவணனை கைது செய்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கின்றனர் காவல் துறையினர்.
ஆனால் முன்கூட்டியே தகவல் அறிந்து உஷாராக டீட்டா சரவணன் தலைமறைவாகி இருந்தார். சிறைவாசலில் வாய்க்கிழிய சவடால் விட்ட டீட்டா சரவணன் தற்போது ஏன் போலீசாருக்கு டாட்டா காட்ட வேண்டும்? தைரியமான ஆள்தானே. தானாகவே வந்து போலீசில் சரணடையலாமே.. ஏன் காவல் துறையை அலைய வைக்க வேண்டும்?” என தவெகவினர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், விழுப்புரத்தில் மறைந்திருந்த திமுக கவுன்சிலர் சரவணனைக் காவல்துறையினர் கைது செய்தனர். நண்பர்களோடு பெங்களூரு செல்வது போல் போக்கு காட்டிவிட்டு, விழுப்புரம் சென்று பதுங்கியிருந்த டீட்டா சரவணனைக் காவல்துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
