Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

”சட்டசபையில் எந்த தீர்மானம் போட்டாலும் தமிழகத்துக்கு கேடே மத்திய அரசு தான்.‌ தமிழகமே ஒன்றினைந்து போராடினால் தான் மேகதாது விவகாரத்தில் நாம் வெற்றியடைய முடியும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ துவக்கி வைத்தார். ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரம் பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், ” மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் ஒரு நல்ல தீர்மானத்தை எல்லா கட்சிகளும் ஒரு சேர இணைந்து நம்முடைய முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்திருக்கிறார்.

ஆனால், ஒன்றை எச்சரிக்க விரும்புகிறேன். இது கர்நாடக அரசு மட்டும் செய்யவில்லை. இதற்கு முழுக்க முழுக்க பின்புறமாக இருந்து இயக்குவதே மத்திய அரசு தான். நரேந்திர மோடி சர்க்கார் தான். டெல்லியில் 2014 டிசம்பர் 7, 8 தேதியில ஒரு ரகசிய கூட்டம் போட்டு கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டு, மேகதாது அணையை கட்டுங்கள் நாங்கள் தடுக்க மாட்டோம், நீங்க கட்டிகிட்டே இருங்க என்று மத்திய அரசு சதித்திட்டம் தீட்டியது. எனவே 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல் தமிழக மக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக போராடினால் தான் வெற்றி பெற முடியும்” எனக் கூறினார்.

இதையும் படியுங்க  விஜய்க்கு எதிராகத் திரும்பும் 10 தவெக எம்.எல்.ஏ-க்கள்? பின்னணியில் அந்த' புள்ளி..! உலுக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago