Mannan Arrested

அதிமுகவிற்கு குறுக்கு வழியில் ஆட்சி பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா புகாரும் அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் கைது செய்யப்பட்ட சம்பவமும் ஆளுங்கட்சியின் அரசியல் நாடகம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். முஸ்தபா மற்றும் பி.எம். மன்னன் நெருங்கிய நண்பர்கள் என்றும், மக்கள் பிரச்சனைகளை திசைதிருப்பவே இந்த நள்ளிரவுக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்துப்பேசிய செல்லூர் ராஜூ, ”மதுரை மத்தியத் தொகுதியில் வென்ற சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவும், குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுகவை சேர்ந்த பி.எம்.மன்னனும் நெருங்கிய நண்பர்கள், மாமான், மச்சான் எனப்பேசக்கூடியவர்கள். அவர்கள் இடையேயான உரையாடல்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

இதில் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பணம் கைமாறுவது தொடர்பாக விளையாட்டாக பேசியுள்ளனர். இந்தச் சம்பவங்களை வைத்து அதிமுக மீது பழிபோட ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்.

Sellur Raju

சட்டப்பூர்வ நடவடிக்கை என்ற பெயரில், நெஞ்சுவலி மற்றும் ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நபருக்கு நவம்பர் 5-ஆம் தேதி சம்மன் அனுப்பி, நவம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு வரச் சொல்லிவிட்டு, அதற்கு முன்பாகவே (நவம்பர் 6 அதிகாலை) தீவிரவாதியைப்போல அவரைக் கைது செய்து அடைத்து வைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதிமுக எப்போதும் மக்களை நேரில் சந்தித்து, தனது 31 ஆண்டுகால சாதனைகளைச் சொல்லி நேர்மையான வழியில்தான் வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போது கூட தனித்துப் போட்டியிட்டே வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

இதையும் படியுங்க  சி.எம்.விஜய்-க்கு புது அலுவலகம் இதற்கு தானா? - அமைச்சர் ஆதவ் சொன்ன அதிரடி விளக்கம்...! 

பணம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கோ அல்லது எங்களது பொதுச்செயலாளருக்கோ கடுகளவும் இல்லை. இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மையால் இதுதானாகவே கவிழும் நிலைக்கு வந்துள்ளது. அதை மறைக்கவே இதுபோன்ற நாடகங்களை முதலமைச்சர் உட்பட ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகின்றனர்.

விலைவாசி உயர்வு: தீபாவளி நேரத்தில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. நேற்றிரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கொசுக்கடியில் கடுமையாக அவதியுற்றுள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் தேங்காமல் இருக்க முறையான வடிகால் வசதியையோ அல்லது புதிய திட்டங்களையோ இந்த அரசு மதுரைக்கு கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலைகளும் வடிகால்களுமே பயன்பாட்டில் உள்ளன.

தமிழகக் காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான சிறப்புமிக்க ஒன்று. ஆட்சியாளர்களின் அழுத்தங்கள் இருந்தாலும், தனிநபரின் மரியாதையைக் குறைக்கும் இதுபோன்ற சம்பவங்களில் நடுநிலையோடு செயல்பட்டு தங்கள் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி… ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்..! மகிழ்ச்சியில் மக்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *