Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

tvk murder

சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த கண்ணன்(45). இவர் ஐடி நிறுவனங்களுக்குக் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். ரவுடி இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. அதிமுக 174வது தெற்கு வட்ட செயலாளராக இருந்து வந்த வண்ணான்துறை கண்ணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவெகவில் இணைந்தார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி இரவு 9.30 மணியளவில் ராமசாமி அவென்யூ எல்லையம்மன் கோவில் தெருவில் தனது நண்பர்கள் கண்ணன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணனை சுத்துப்போட்டது. இதனை சற்றும் எதிர்பாராத கண்ணன் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் கொலை சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இதையும் படியுங்க  ஷெட்டில் நின்ற கார்... உள்ளே வீசிய துர்நாற்றம்: மதுரையை உலுக்கிய மர்ம மரணம்!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த பரணி (20), கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (20), திருவான்மியூர் பெரியார் நகரைச் சேர்ந்த நரேன் (20), இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (23), கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் (20) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. அதாவது இந்த வழக்கில் கைதான பரணியின் பெரியப்பா சிவனை கடந்த 2009-ம் ஆண்டு கண்ணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை நடத்தி வந்த பரணியின் தந்தை வேலுவையும் கடந்த 2016-ம் ஆண்டு நந்தனம் தேவர் சிலை அருகே வண்ணான்துறை கண்ணன் கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது.

தனது தந்தை மற்றும் பெரியப்பா கொலைக்குப் பழிக்குப் பழியாக 2016-ம் ஆண்டு 10 வயதில் சபதம் எடுத்த பரணி ரிவென்ஞ் எடுக்க காத்திருந்துள்ளார். பரணியிடம் அவரது குடும்பத்தினரே தந்தை மற்றும் பெரியப்பா கொலையைப் பற்றி அடிக்கடி சொல்லி, அவரது மனதில் கொலைவெறியை வளர்த்து வந்துள்ளனர். இதனையடுத்து
கண்ணனின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளார். அப்போதுதான் கண்ணன் தினமும் இரவு நேரத்தில் வண்ணான்துறை ராமசாமி அவென்யூ எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசுவதை நோட்டமிட்டுள்ளார். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் இதுதான் சரியான நேரம் என்பதால் கண்ணனைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையும் படியுங்க  விஜயை பழி வாங்க நடந்த நாடகம்..! குமுறும் தவெக நிர்வாகிகள்..!

இதனிடையே கண்ணன் கொலைக்கு 3 சிறுவர்கள் உதவியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்ணன் எங்கெல்லாம் செல்கிறார் என கண்காணித்தது, கொலை நடந்த அன்று தெருவில் ஆட்கள் நடமாட்டத்தை பார்த்து கூறியது, கொலையாளிகளுக்கு உணவு வாங்கி கொடுத்தது மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைக்க உதவியது தெரிவந்தது. இதையடுத்து 3 பேரையும் கெல்லிஸ்சில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பாணியில் இந்த கொலைச் சம்பவமும் நடந்துள்ளது. அப்போது ஆம்ஸ்ட்ராங் தப்பி ஓடாமல் இருக்க அவரது காலை முதலில் வெட்டினார்கள். அதேபோல்தான் வண்ணான்துறை கண்ணனையும் தப்பி ஓடாமல் இருக்க முதலில் காலை குறிவைத்து வெட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago