Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்து ஒரு மாத‌காலம் கடந்த நிலையில் தற்போது மாவட்டவாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், அரசு அறிவிக்கும் நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள்மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் இந்த பொறுப்பு அமைச்சர்கள் நியக்கப்பட்டிருக்கிறார்கள்

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்திறக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் காஞ்சிபுரம் எம்எல்ஏவும், வனத்துறை அமைச்சருமான ரஞ்சித் குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

யார் இந்த ரஞ்சித் குமார்?
எம்ஜிஆர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த “நினைத்ததை முடிப்பவன்” திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ரஞ்சித் குமார். அவரை நினைத்தே அவருடைய தந்தை ரஞ்சித்குமார் என பெயர் வைத்தாராம். அதன்பிறகு தந்தை வழியில் அதிமுகவில் இணைத்துக் கொண்டவர் மாவட்ட செயலாளராகி 30-கிளை கழக செயலாளர்களுக்கு XL Heavy Duty 2 சக்கர வாகனம் வாங்கி கொடுத்து அதிமுகவை வளர்த்தெடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  'போதும்டா சாமி..! இபிஎஸ்-க்கு தள்ளிப்போன அதிர்ச்சி வைத்தியம்..! வேலுமணியின் தவெக டீலிங்கில் இடி!

பிறகு, அதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட காரணத்தால் பின்னர் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகியவர், கடந்த பிப்ரவரி 19-ம்தேதி பண்ருட்டி ராமச்சந்திரனை முன்னிலையாகக் கொண்டு எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (MGR ADMK) என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் மாநில பொதுச்செயலாளராகவும் இருந்திருக்கிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்த நேரத்தில், உங்கள் காலில் கூட விழுகிறோம் எங்களை அண்ணா திமுக’வில் அடிப்படை உறுப்பினராக மீண்டும் இணைத்துக் கொள்ளுங்கள், நாம் அனைவரும் ஒன்று சேரவில்லை என்றால் “மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு இயக்கம்” (தவெக) தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்று, காஞ்சிபுரம் ஒரு பொது மேடையிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வேண்டுகோளாக வைத்த செய்தி ஊடகங்கள் மூலம் பேசுபொருளாகி அதிமுகவினர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

அதனைத் தொடர்ந்து கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொள்ள இறுதி வரை போராடியும் தன்னை இணைக்க மறுத்ததால், 2026 மார்ச் மாதத்தில் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியின் ராஜினாமா கடிதத்தை நேரடியாக கட்சியின் நிறுவனர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று தவெகவில் அதிரடியாக இணைந்தார்.

இதையும் படியுங்க  மரணப் படுக்கையில் அதிமுக..! இதை செய்தால் அடுத்து எடப்பாடியே முதல்வர்..! ஏக்கத்தில் ரர-க்கள்..!

நடந்து முடிந்த தேர்தலில் ரஞ்சித் குமார், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 91,350 வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சிபுரம் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.வாக தேர்வானார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவருக்கு தவெக கட்சியின் புதிய அமைச்சரவையில் வனத்துறை அமைச்சரானவருக்கு தற்போது “திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ” அந்தஸ்து வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய்.

இவர் மட்டுமல்ல இவரை போன்று திருப்பத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளராக, ஒன்றிய குழுத் தலைவராக பணியாற்றியவர் இவருக்கும் சீட் மறுக்கப்பட்டதால் இறுதியாக தவெகவை நம்பி அதில் இணைந்து தற்போது திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் “டாக்டர் திருப்பதி’யும்” ஒருவர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆந்திர வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது வாணியம்பாடி. ஆம்பூர் பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை கெடுப்பதால் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மாவட்டத்திற்கு வனத்துறை அமைச்சரே பொறுப்பு அமைச்சராக வந்திருப்பது தற்போது இப்பகுதி விவசாயிகளிடம் மிகுந்த எதிர்பார்ப்ப்பை கிளப்பியிருக்கிறது.

இதையும் படியுங்க  விஜயுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை… பின்னணி என்ன?
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago