Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கமல்ஹாசன், முதலமைச்சரை சந்தித்து திரைப்படத் துறையை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அதிகரித்து வரும் செலவினங்களை கருத்தில் கொண்டு, திரைத்துறைக்கு விதிக்கப்படும் உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழக அரசு சார்பில் தனி ஓடிடி தளத்தை தொடங்க வேண்டும் என்றும், திரைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்பே கசிவதைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

அதோடு, தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் ஒரு நாளுக்கு 4 மற்றும் 5 காட்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், முதலமைச்சரை சந்தித்தபோது இந்த கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க  அவர் CM இல்ல.. என் தம்பி!" - ஓடிவந்து முதலமைச்சர் காரை மறித்த 'வேலு அம்மா' டி.கே. கலா! நெகிழவைக்கும் பின்னணி!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago