Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரைச் சுற்றியுள்ள வளையம் மிக வேகமாக இறுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 20-ஆம் தேதி, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் சொகுசு பங்களாவிற்குள் கரூர் ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் மஃப்ட்டி உடையில் அதிரடியாகப் புகுந்தனர். அங்கு செந்தில் பாலாஜியோ, அவரது தம்பியோ இல்லாததால், அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரின் ஸ்மார்ட்போனை பறிமுதல் செய்த போலீசார், லேட்டஸ்ட் அழைப்புகள் மற்றும் ரகசிய தொடர்புகள் குறித்து அதிரடி வேட்டையில் இறங்கினர்.

இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் அந்த 400 கோடி ரூபாய் மெகா டிரான்ஸ்பார்மர் ஊழல் தான்! இந்த விவகாரத்தில் சிபிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, விசாரணையை ராக்கெட் வேகத்தில் துரிதப்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான அரசியல் அஸ்திரமே வேறு. கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது, திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் இருந்து ஸ்கெட்ச் போட்ட மாஸ்டர்மைண்டே செந்தில் பாலாஜி தான் என்பது தவெக தரப்பின் தீராத கோபம்.

இதையும் படியுங்க  பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து: "என் 70 ஆண்டுகால பயணம்…" - வைரலாகும் எக்ஸ் (X) பதிவு

தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ், சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் ஐபிஎஸ் ஆகிய இரு டாப் அதிகாரிகளுக்கும், செந்தில் பாலாஜி, அசோக் குமாரை எந்த நேரத்திலும் தூக்கிக் கம்பிக்கு பின்னால் உட்கார வைக்க கோட்டையில் இருந்து “டாப் சீக்ரெட்” உத்தரவு பறந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ‘கரூர் பிரதர்ஸ்’ இருவரையும் அண்டர்கிரவுண்டிற்கே ஓட வைத்துள்ள இந்த போலீஸ் வலை, தமிழக அரசியலில் எந்த மாஜி விக்கெட்டை முதலில் வீழ்த்தப் போகிறது என்ற அதிரடி ஆட்டம் தொடங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago