https://republictn.com/

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்குட்பட்ட அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வனத்துறை சார்பாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் வனச்சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வாகனத்திற்கு, நபருக்கு என தனித்தனியாக பில்லிங் முறையில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் சேவை மேம்பாட்டை கருத்தில் கொண்டு இன்று முதல் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு வன சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகள் UPI/ QR CODE போன்றவற்றின் வழியாக ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் பணமாக கட்டணம் செலுத்தும் பில்லிங் முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் உள்ள ஆன்லைன் இயந்திரம் சற்று தாமதமாக செயல்பட்டு வருவதாக சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்..

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago