Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

விசிகவின் மூத்த நிர்வாகியான சங்கத்தமிழன் கட்சியின் தற்காலிக நீக்கத்திற்குப் பிறகு, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி மீது முன்வைத்துள்ள அடுக்கடுக்கான புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

மூத்த பத்திரிகையாளர் ‘தமிழா தமிழா’ பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ” விசிக தலைவர் தொல். திருமாவளவனின் கட்டுப்பாட்டில் தற்போது கட்சி இல்லை என்றும், ஒட்டுமொத்த விசிகவும் ரவிக்குமாரின் பிடிக்குள் சென்றுவிட்டது என்றும் சங்கத்தமிழன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தலித் தலைவர்களில் ரவிக்குமாருக்கு மட்டும் வாழ்த்துச் சொன்னதன் பின்னணி என்ன? என்றும், அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊடுருவலா? என்றும் சங்கத்தமிழன் கேள்வி எழுப்பியுள்ளார். காலச்சுவடு, ஜெயமோகன் உள்ளிட்ட பார்ப்பனக் குழுக்களால் தலித் இயக்கத்திற்குள் அனுப்பப்பட்ட உளவாளிதான் ரவிக்குமார்.

திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ததே ரவிக்குமார்தான் என்று கூறப்படுகிறது. கட்சி துவங்கப்பட்ட காலம் முதல் சிறை சென்றவர்கள், கொடிகட்டியவர்கள் என விசுவாசமாக உழைத்த தொண்டர்கள் பலருக்குச் சீட் மறுக்கப்பட்டது. அதற்கு மாறாக, இளையபெருமாள் மகனுக்கும், மாரி செல்வராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் காட்டிய நபர்களுக்கும் சீட் வழங்க ரவிக்குமாரே காரணம் எனச் சங்கத்தமிழன் சாடியுள்ளார்.

இதையும் படியுங்க  விஜய்யை உசுப்பிய திருமா… திமுக போட்ட ‘திருச்சி ஸ்கெட்ச்’ க்ளோஸ்..? அதிர்ச்சியில் அறிவாலயம்..!

விசிகவின் முக்கிய முகமாக இருந்த பனையூர் பாபுவிற்குச் சீட் கிடைக்காமல் தடுத்ததே ரவிக்குமார்தான். தன்னைத் தாண்டி வேறு யாரும் கட்சியில் பெரிய தலைவராக வளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே பாலுசாமி போன்ற சீனியர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாகவே பனையூர் பாபு 1,000 ஆதரவாளர்களுடன் விசிகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசிக தொண்டர்கள் திமுகவிற்காக உழைத்த நிலையில், கட்சிக்கு எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை என்கிற ஏமாற்றம் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக கூட்டணி வைக்கலாம் என ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் முயன்றபோது, “கட்சியை உடைத்துவிடுவேன்” எனத் திமுகவின் ஆதரவோடு திருமாவளவனை ரவிக்குமார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தடித்த அணுகுமுறையால்தான் அதிருப்தியடைந்த விசிக தொண்டர்கள், தலித் வாக்குகள் பெருமளவில் தவெக பக்கமாக மாறியுள்ளன.

சங்கத்தமிழன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாததால், தலைவர் திருமாவளவன் காலையில் மனம் மாறிவிடுவார் என்று அஞ்சி, அவசர அவசரமாக நள்ளிரவு 12 மணிக்கு ரவிக்குமாரே முன்னின்று சங்கத்தமிழனைத் தற்காலிக நீக்கம் செய்ய வைத்துள்ளார். தற்போது 95% விசிக தொண்டர்கள் ரவிக்குமாருக்கு எதிராகத் திரும்பி, அவரை விசிகவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  மாபெரும் சிக்கலில் செந்தில் பாலாஜி..! பொறி வைத்த ED..! முதல்வர் விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..!

வங்கியின் கிளர்க்காக இருந்த ரவிக்குமாருக்கு இன்று சென்னை கே.கே. நகர் வீடு உட்பட நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள சொத்துக்கள் எப்படி வந்தன? என்று சங்கத்தமிழன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘மணல்கேணி’ ரகசியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை கமிஷன்கள் மூலம் அவர் சேர்த்த சொத்து விவரங்கள், அவருடைய உண்மையான முகமூடியை அடுத்த 3 மாத காலத்திற்குள் மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலப்படுத்துவேன் என்று சங்கத்தமிழன் அதிரடியாக எச்சரித்துள்ளார்” என தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago