விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய முகமான ஆளூர் ஷாநவாஸை முன்வைத்து இந்த புதிய அரசியல் ஆபரேஷன் அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது,
தற்போது துபாயில் இருக்கும் ஆளூர் ஷாநவாஸ், கட்சிப் பாகுபாடின்றி தமிழகத்திலுள்ள பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அனைத்து முஸ்லிம் இயக்கங்களிலும் அவருக்கு இருக்கும் நற்பெயரையும், நட்பு வட்டாரத்தையும் பயன்படுத்தி, விரைவில் தமிழகத்தில் ஒரு புதிய இஸ்லாமிய அரசியல் அமைப்பை உருவாக்கலாமா என்பது குறித்தே இந்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்த புதிய அமைப்புக்கான ஆலோசனைக் கூட்டங்களில், தற்போதைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்குபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பைக் கூட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு எம்.எல்.ஏ இடங்களைப் பெற்றது. அதில் பாபநாசம் தொகுதியில் வென்ற ஷாஜகான் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மற்றொரு தொகுதியான வாணியம்பாடியில் வென்ற சையத் ஃபாரூக் பாஷாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அதிருப்தியிலுள்ள வாணியம்பாடி எம்.எல்.ஏ சையத் ஃபாரூக் பாஷாவிடமும் ஆளூர் ஷாநவாஸ் புதிய அமைப்பு குறித்துப் பேசியுள்ளார். ஆளூர் ஷாநவாஸ்- வாணியம்பாடி எம்.எல்.ஏ சையத் ஃபாரூக் பாஷா ஆகியோரின் கூட்டு ஒருங்கிணைப்பில் இந்த புதிய இஸ்லாமிய அமைப்பு மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நகர்வானது, தற்போதுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை உடைத்து, அதன் ஒரு பகுதியைத் தன்பக்கம் இழுக்கும் மாஸ்டர் பிளானாகக்கூட இருக்கலாம் என்று இஸ்லாமிய இயக்க வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக-வுடன் இருக்கிறது இருக்கிறது இந்தியன் முஸ்லீம் லீக். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஆளூர் ஷானவாஸ் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்கிற விரக்தியிலும், விசிக, தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதை விரும்பாமல் அதிருப்தியில் இருக்கிறார். ஆகவே அவரை வைத்து இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியை உடைக்க ஸ்டாலின் அசைண்மெண்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு அடங்காத, மசியாத கட்சியை உடைப்பது கருணாநிதியின் வழக்கம். அடையே இப்போது செய்து வருகிறார் ஸ்டாலின் என்கிறார்கள் திமுக கூட்டணியில் இருந்த கட்சியினர்.
