Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் வெற்றி பெற்று வரும் ‘மா இன்ட்டி பங்காரம்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை சமந்தா, தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலத்தைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.

விவாகரத்து மற்றும் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட காலத்தில், கடுமையான மன அழுத்தத்தையும் தனிப்பட்ட வாழ்க்கைச் சவால்களையும் எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில், தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாக பலரும் விமர்சித்தது தன்னை மிகவும் பாதித்ததாகவும், அதனால் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் கூட ஏற்பட்டதாகவும் சமந்தா மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, வாழ்க்கையில் எதுவும் சரியாக நடைபெறவில்லை என்ற உணர்வு தன்னை ஆட்கொண்டதாகவும், “இதோடு எல்லாவற்றிலிருந்தும் பின்வாங்கிவிடலாம் என்று கூட நினைத்தேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு மிகுந்த தைரியம் தேவை என்பதால், அந்த எண்ணங்களிலிருந்து விலகி, தனது மன உறுதியை வளர்த்துக்கொள்ளும் வழிகளைத் தேடத் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  ‘சிக்மா’ வென்றால் லைகாவுக்கு விடிவு..! தோற்றால்.." முதல்வரின் மகன் படத்தால் மாறப்போகும் கணக்கு..!

சினிமா உலகில் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததாகவும், மயோசிடிஸ் நோயால் ஏற்பட்ட கட்டாய இடைவேளை அந்த மனநிலையிலிருந்து தன்னை வெளியே கொண்டு வந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.

வெளிப்புற வெற்றிகளை விட, மனதிற்குள் இருந்த காயங்களையும், சுய வெறுப்பையும் குணப்படுத்துவதே வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றி என்பதை அந்த அனுபவம் தனக்குக் கற்றுக்கொடுத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வாழ்க்கையில் சந்தித்த தோல்விகளும், கடுமையான சோதனைகளுமே தனக்கு மிகப் பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.

இந்தக் கடினமான காலத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோரு தன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து நடிக்க ஊக்கமளித்ததாகவும், அவரது ஆதரவே மீண்டும் சினிமாவில் பயணத்தைத் தொடர தன்னம்பிக்கை அளித்ததாகவும் சமந்தா நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணியில், சமந்தா நடித்து, அவரது சொந்த தயாரிப்பில் உருவான மா இன்ட்டி பங்காரம் திரைப்படம் தற்போது 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படியுங்க  "நள்ளிரவு 3 மணி… வாட்ஸ் அப் மெசேஜ்… பதறியடித்து ஓடிய சமந்தா! நாத்தனார் வெளியிட்ட நெகிழ்ச்சி உண்மை!"

மேலும், இந்த வெற்றி விழாவில் சமந்தா கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இந்த வெற்றி என் வாழ்க்கையில் ஒரு மறுபிறவி போன்ற உணர்வை அளிக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் தனது உரையை சமந்தா நிறைவு செய்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago