https://republictn.com/

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபர் அமீர் அலி என அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்தக் கொலை வழக்கில் அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 5, 2026 அன்று, பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து ரயில்வே போலீசார் சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, தலை, கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் நபரின் உடல் பகுதி மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளைக் கண்டறிய புளியந்தோப்பு துணை ஆணையர் மற்றும் ரயில்வே டி.எஸ்.பி. தலைமையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பேர் ஆட்டோவில் வந்து அந்த சூட்கேஸை இறக்கி வைத்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவில், கொலையான நபர் அமீர் அலி என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக இந்த கொடூரக் கொலை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

அமீர் அலியை அடித்துக் கொலை செய்த பின்னர், உடலை மறைப்பதற்காக அவரது தலை, கைகள் மற்றும் கால்களைத் தனித்தனியாக வெட்டி சிதைத்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், விசாரணையின்போது ஆத்திரத்தில் தனது கணவரின் ஆணுறுப்பையும் வெட்டியதாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது துண்டிக்கப்பட்ட மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணியிலும், கொலையின் பின்னணியில் உள்ள முழுமையான காரணங்களை கண்டறியும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago