Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகளுக்குத் தங்களது தாய் ஊருக்குச் சென்றிருப்பதாகத் தந்தை மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளார். குழந்தைகளும் அதை நம்பி வீட்டில் நடமாடியுள்ளனர். ஆனால், அதே வீட்டின் சமையலறைப் பரணில் கைகள் கட்டப்பட்டு, கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையில் தங்களின் தாயின் சடலம் கிடந்தது அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே, கழுத்தை அறுத்துக் கொலை செய்து சடலத்தைப் பரணில் மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கூத்தாண்டவர் நகர் பகுதி சேர்ந்த விஜயகுமார் (49) தனலட்சுமி (38) தம்பதிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் விஜயகுமார் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி பேரணாம்பட்டு நகரப் பகுதியில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார்.

தனலட்சுமி – குமரேசன் என்பவரோடு திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும். இது குறித்து விஜயகுமார் தனலட்சுமியை பலமுறை கண்டித்து எச்சரிக்கை செய்தும் தனலட்சுமி கள்ள உறவை கைவிடாததால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து இருவருக்குமிடையே பிரச்சினை முற்றி குடும்ப சண்டையாக மாறி இருக்கிறது

இதையும் படியுங்க  கள்ளக்காதல் ... சந்தேகப் புதைகுழி... கடத்தூரை உலுக்கிய ஒரு அடி ஆழக் கொலை!

இதனைத் தொடர்ந்து, ஜூன் 30-ந்தேதி விஜயகுமார் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் போலீசார் விஜயகுமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டு ஸ்லாப்பில் கை , கால்கள் கட்டப்பட்டு மணிகட்டுகள் அருப்பட்ட நிலையில் தனலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரேதத்தை கைபற்றிய போலீசார் தனலட்சுமியின் கணவர் விஜயகுமாரிடம் உரிய விசாரணை மேற்கொண்டதில்
விஜயகுமார் நடத்தை சந்தேகத்தின் பேரில் மனைவி தனலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த 30-ந்ததேதியன்று வழக்கம்போல் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில் தனலட்சுமி விஜயகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவி தனலட்சுமியின் கழுத்தை அறிவாளால் வெட்டி , கைகால் நரம்புகளையும் அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்து தனலட்சுமி, உடலை சமையலறை பரண் மேல் போட்டதாகவும்

மேலும் பள்ளியில் இருந்து வந்த குழந்தைகள் அம்மா எங்கே என கேட்டதற்கு அம்மா ஊருக்கு போய்விட்டதாக விஜயகுமார் கூறியதாக விசாரணையில் தெரியவந்தது , இதனையடுத்து விஜயகுமாரை மேல்பட்டி போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

இதையும் படியுங்க  495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்… ஆனால் மாணவன் உயிரிழந்த சோகம்

அம்மா கொலை செய்யப்பட்டும் அப்பா ஜெயிலுக்கு போனதால் மூன்று குழந்தைகளும் பராமரிப்பு இன்றி நிர்க்கதியாக உள்ளனர்

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேர்ணாம்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago