Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளி இன்று (ஜூலை 3, 2026) உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமோனியா நச்சு வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய சிலருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 18 பேரும் பெண் தொழிலாளர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், அசாம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சில பெண் தொழிலாளர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்க  குடும்பத் தகராறா? சொத்து விவகாரமா? தஞ்சையை உலுக்கிய சிறைபிடிப்பு சம்பவம்.. பின்னணி என்ன?

ஆலையில் எஞ்சியுள்ள அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 300 மீட்டர் சுற்றளவுக்குள் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டனவா, சட்டவிரோத ஆள்சேர்ப்பு நடைபெற்றதா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழிற்சாலைகளில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago