Edappadi – Vijay

வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 80 ரூபாயைத் தாண்டி பறக்கிறது. ஏழை மக்கள் கண்ணீர் விடுகிறார்கள். அவர்களுக்கு ரேஷன் கடையில் கிலோ 35 ரூபாய்க்கு வெங்காயம் தருவோம் என வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு. ஆனால் கடைசியில் நடந்தது என்ன?

வட மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 4.5 லட்சம் கிலோ வெங்காயம் காணாமல் போயிருக்கிறது. மீதம் 2.5 லட்சம் கிலோ சென்னை கொருக்குப்பேட்டையில் லாரியிலேயே அழுகி நாறுகிறது. இதைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘வெங்காய அரசின் வெங்காய ஊழல்’ என தோலுரித்து தொங்கவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, விஜய் தலைமையிலான தவெக அரசின் கூட்டுறவுத்துறை மூலம், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF), மத்திய அரசு நிறுவனமான NAFED மற்றும் NCCF-இடம் இருந்து கொள்முதல் செய்தது.

இதுவரை 2,380.32 டன் வெங்காயம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்றுத் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் , விலை மேலும் ஏறவே, நான்காம் கட்டமாக மகாராஷ்டிரா நாசிக் பகுதியில் இருந்து மேலும் 450 டன் வெங்காயம் கொண்டுவர ஆர்டர் போடப்பட்டது தமிழ்நாடு கூட்டுறவு துறை . கிலோ ரூ.29, Grade A தரம், குறைந்தபட்சம் 45 மி.மீ விட்டம் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

இதையும் படியுங்க  இனி விஜய் ஆட்சியை அசைக்க முடியாது… சி.வி.சண்முகம் அலுவலகத்தில் விஜய்..! ஸ்டாலின் திட்டம் பணால்..!

மாயமான 450 டன் – திருட்டுக் கதை இங்குதான் ஆரம்பம்!

இங்குதான் திருட்டுக் கதையே ஆரம்பிக்கிறது. NAFED, தமிழக அரசின் ஆய்வுக்குழு நாசிக்கில் சரக்கை பார்க்க காத்திருக்க, அவர்களை மதிக்காமல் 450 டன் வெங்காயத்தை சரக்கு ரயிலில் ஏற்றி சென்னை கொருக்குப்பேட்டை சரக்கு முனையத்துக்கு அனுப்பிவிட்டது.

ரயில் வந்து இறங்கிய வெங்காயம் எங்கே?

கூட்டுறவுத்துறை சொல்கிறது: “நாங்கள் அதை ஏற்கவில்லை. பணம் கொடுக்கவில்லை. அது NAFED-க்கு சொந்தமானது, எங்களுடையது அல்ல.”

ரயில்வே அதிகாரிகள் சொல்கிறார்கள்: “சரக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. தமிழக அதிகாரிகளே எடுத்துச் சென்றுவிட்டனர். முனையத்தில் இப்போது ஒரு வெங்காயமும் இல்லை.”

இது ஒருபுறம் இருக்க, அழுகி நாறும் இன்னொரு 250 டன் கதை கொருக்குப்பேட்டையில் அரங்கேறியிருக்கிறது.

வட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 250 டன் வெங்காயம், 10 லாரிகளில் கொருக்குப்பேட்டை கிடங்கில் கடந்த 3 நாட்களாக இறக்கப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. திறக்காததால் வெங்காயம் அழுகி வீணாகி துர்நாற்றமெடுத்து  வீசி வருவதாக கூறப்படுகிறது , விவசாயிகளின் உழைப்பும், மக்கள் வரிப்பணமும் லாரிக்குள்ளேயே அழுகிப் போனது.

விஜய் அரசின் வெங்காய பல்டி

எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கவே, நவம்பர் 3-ம் தேதி கூட்டுறவுத்துறை ஒரு அவசர விளக்கம் கொடுத்தது. அதில்”அக்டோபர் 31 அன்று கொருக்குப்பேட்டையில் ஆய்வு செய்தோம். மாதிரி மூட்டைகளில் 20% முதல் 26% வரை வெங்காயம் அழுகிய, முளைத்து, பூஞ்சை பிடித்த நிலையில் இருந்தது. மீதி 50.2% வெங்காயம் 45 மி.மீ-க்கு குறைவாக சிறியதாக இருந்தது. அதனால் தரம் இல்லை என்று 400 டன் ஆர்டரை ரத்து செய்துவிட்டோம்.”

இதையும் படியுங்க  பழனி நிலமோசடி வழக்கில் பயங்கர திருப்பம்... கைதான முக்கிய நபர் உயிரிழப்பு... சிறையில் நடந்தது என்ன?

மேலும், “அந்த 400 டன் அழுகிய வெங்காயம் எங்களுடையது அல்ல, மத்திய NAFED-உடையது” என்று TNCCF, நவம்பர் 4-ம் தேதி NAFED-க்கு கொடுத்த 400 டன் ஆர்டரை முறையாக ரத்து செய்ததாக கையை கழுவியது தமிழ்நாடு கூட்டுறவுத் துறை.

கணக்கு பாருங்கள்… 400 டன் வெங்காயத்தின் மதிப்பு மட்டும் கிலோ ரூ.29 வீதம் ரூ.1.16 கோடி!

அரசு ஏற்கவில்லை என்கிறது, ரயில்வே எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்கிறது. நடுவில் 4.5 லட்சம் கிலோ வெங்காயம் காற்றில் கரைந்ததா? வெங்காயத்திலும் ஊழலா? – இதுதான்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கேட்கும் கேள்வி.

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்!

1. வெளிச்சந்தையில் விலை உயர்ந்ததும், ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு தருவோம் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு.  2. 250 டன் வெங்காயத்தை ஏன் அழுகவிட்டீர்கள்? லாரியிலேயே 3 நாள் இறக்காமல் விட்டது யார் குற்றம்?  3. NAFED நான்காம் கட்டமாக அனுப்பிய 450 டன் தரமில்லை என்று தமிழக அரசு சொல்கிறது, NAFED-க்கு திருப்பி அனுப்பவில்லை என்று NAFED சொல்கிறது. இடையில் வந்த 450 டன் வெங்காயம் எங்கே?  4. “குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் திக்குத் தெரியாத தவெக ஆட்சியின் நிர்வாகம் என்ன ஆனது?” என்று கடுமையாக சாடியவர்,  இந்த வெங்காய ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான்” என காட்டமாக கூறியிருக்கிறார். 

இதையும் படியுங்க  கருணாநிதி குடும்பத்தில் முதல் விக்கெட்? விஜய் பக்கம் சாயும் மு.க.அழகிரி மகள்.. மேயர் பதவிக்கு டர்க்கெட்..?

கொள்முதல் மகாராஷ்டிரா, குழப்பம் கொருக்குப்பேட்டை, காணாமல் போனது 450 டன், அழுகியது 250 டன், பல்டி அடிப்பது கூட்டுறவுத்துறை! பதில் அளிப்பது பள்ளி கல்வித்துறை அமைச்சர் 

கூட்டுறவுத் துறை வெங்காய ஊழலா இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்”450 டன் வெங்காயம் மாயம் என்பது உண்மைக்கு புறம்பான தகவல்; கொருக்குப்பேட்டையில் உள்ள வெங்காயத்திற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை” என விளக்கமளித்திருக்கிறார்.

விலைவாசியை கட்டுப்படுத்த வந்த திட்டம், வெங்காய ஊழலால் விஜய் அரசின் நிர்வாகத் திறமையின்மையை அம்பலப்படுத்தியிருப்பதாக எதிர்கட்சியினர் சாடி வருகின்றனர்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *