Gingee Girl

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி கிராமம். குளக்கரை கூலி வேலை செய்யும் வடிவேலு – பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி(7), 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி. கடந்த அக்டோபர் 11 மாலை தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு, அன்று இரவு தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் படுத்து உறங்கி யவர்

மறுநாள் அக்டோபர் 12 அதிகாலை திடீரென மாயமான செய்திதான் தமிழகத்தையே உலுக்கிய 25- நாள் மர்மத்தின் தொடக்கம்.  

பார்ட் 1: முதல் 10 நாள் உள்ளூர் போலீஸ் சொதப்பல் ;- பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள், ஊர் மக்கள் என தேடுதல் வேட்டை தீவிரமானது.  

ஆனால் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் முதல் 24- மணி நேரத்தில் மிக முக்கியமான தவறுகள் நடந்துவிட்டன , அவரது வீடு, வாசல், கொல்லைப்புறத்தை சீல் வைக்காமல் ஊர் மக்களை அனுமதித்ததால் அன்று இரவு மற்றும் காலை வரை அங்கு பதிந்த  விரல் ரேகை, கால்தடம் அழிந்தது. 

சிறுமி வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மூதாட்டி வீட்டு கதவை நள்ளிரவில் யாரோ தட்டிய தகவலை விசாரிக்கவில்லை.   3. வெளிப்புற கிணறு, ஏரிகளில் மட்டும் தேடிவிட்டு, உள்ளூர் சந்தேக நடமாட்டங்களையும்  பதிவு செய்யவில்லை. 11 நாட்கள் தேடியும் துப்பு இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்த, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.

இதையும் படியுங்க  "முருகன் சொத்துக்கே கைவச்ச கும்பல்..! 100 கோடி வழக்கில் முக்கிய புள்ளி சிறையில் மர்ம மரணம்: சிபிசிஐடி வேட்டையில் சிக்கும் அரசியல் பின்னணி?!

பாரட்  2: அக்டோபர் 22 – களமிறங்கிய சிபிசிஐடி, தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 5 தனிப்படைகளாக பிரிந்து விசாரணை இறங்கினர் 

அதற்காக ஆலம்பூண்டி அரசு பள்ளியில் தற்காலிக விசாரணை மையம் அமைக்கப்பட்டது. முதலில் சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேலு, மூத்த சகோதரி ஆகியோரிடம் வீடியோ பதிவுடன் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.  

நேற்றுடன் சிபிசிஐடி வசம் வந்து 15  நாட்கள், சிறுமி மாயமாகி 24 நாட்கள் ஆகியும் எந்த முன்னேற்றம் இல்லை என்பதே தற்போதைய நிலை.  

பார்ட்  3: திணறலுக்கு காரணம் – துப்பு இல்லாததால் சிபிசிஐடி விசாரணை வளையத்தை பெரிதாக்கிக் கொண்டே போனது: 1. சம்பவத்தன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை அருகில் உள்ள செங்கல் சூளை 12 மணி நேரம் எரிந்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்கள், டிராக்டர் டிரைவர் அஜித்குமார் வரை விசாரணை நடத்தினர் 

இதையும் படியுங்க  ஆகாஷ் கொலை வழக்கு: 28 காயங்கள்… 102 நாட்கள் போராட்டம்… சிபிசிஐடி தாக்கல் செய்த அதிரடி குற்றப்பத்திரிகை!

2. அன்று இரவு ஆலம்பூண்டி – செஞ்சி சாலையில் சென்ற 13 நேஷனல் பர்மிட் லாரி டிரைவர்களை அடையாளம் கண்டு தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் ,  3 -சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு டீக்கடை, ஓட்டல்களில் காட்டி விசாரணை நடத்தப்பட்டது மேலும் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 5 வடமாநில தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தினர் 

4. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய செஞ்சி சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரை, என்பவன்  அடிதடி வழக்கில் சிறையில் இருந்தான். அவனை சிறையில் இருந்து அழைத்து வந்து சத்தியமங்கலம் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தபோது, அவனது நண்பன் ஆடு மேய்க்கும் அரவிந்த் பற்றி தகவல் வந்தது.  செஞ்சி சுற்றுவட்டார காட்டுப்பாதைகளை நன்கு தெரிந்த அரவிந்த்துக்கு கூடுதல் தகவல் தெரிந்திருக்கலாம் என சிபிசிஐடி அவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று  4- வது நாளாக விசாரணை தொடர்கிறது. இதுதான் இப்போது கேஸின் திறவுகோலாக பார்க்கப்படுகிறது.  5 .இருபது நாட்களை கடந்தும் துப்பு இல்லாததால் ஆலம்பூண்டி சுற்றுவட்டார காட்டுப்பகுதிக்குள் வனத்துறையுடன் இணைந்து தேடுதலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது சிபிசிஐடி போலீசார்

பாகம் 4: நாமக்கல் ட்விஸ்ட்! நவம்பர் 4 (நேற்று) வழக்கில் பரபரப்பு திருப்பம் நாமக்கல் மாவட்டம் கோனானூர் அங்கன்வாடி சமையலர் பவானி என்ற பெண் கொடுத்த தகவல் “கடந்த அக்டோபர் 29-ம் தேதி நாமக்கல் தத்தகிரி முருகன் கோவிலில் வயதான தம்பதியருடன் செஞ்சி சிறுமி ஹேமலதாவை பார்த்தேன்” என்றார் , இதேபோல் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியிலும் சிறுமியை பார்த்ததாக தகவல் வந்துள்ளது. உடனே சிபிசிஐடி படை அவசரமாக நாமக்கல் மற்றும் புவனகிரி நோக்கி பறந்தது.  

இதையும் படியுங்க  திருப்பத்தூர் மாவட்டத்தை சல்லடை போட்ட போலீஸ் -  26 கிலோ போதை பறிமுதல் , 9 பேர் கைது!

இதற்கிடையே நாமக்கல் அருகே முருகன் கோயிலில் வயதான தம்பதியரிடம் செஞ்சி சிறுமியை பார்த்ததாக CBCID போலீஸிடம் சொன்ன அங்கன்வாடி சமையலர் பெண்ணிடம் முறையான விசாரணையை தாண்டி, தனது குடும்பத்தையும், தன் ஒழுக்கம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரிப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறி உள்ளார் 

இப்போது நிலை என்ன? நாமக்கல்லில் பார்த்ததாக கூறியவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை, புவனகிரி பகுதியில் சிசிடிவி ஆய்வு, நாமக்கல் முருகன் கோவிலில் இருந்த அந்த வயதான தம்பதியரை தேடும் பணி, ஒருபுறம் ஆடு மேய்க்கும் அர்விந்த்திடமும் தொடர்ந்து விசாரணை என முன்று முனைகளில் சிபிசிஐடி திணறி வருகிறது. இதனால் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பாமக அதிமுக தரப்பில் எழுந்துள்ளது .

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *