Ambur Girl:

திருப்பத்தூர் மாவட்டத்தையே உலுக்கிய 60 நிமிட த்ரில்லர்! நடந்தது என்ன ?

ஆம்பூர்… நேற்று வெள்ளிக்கிழமை மாலை. வழக்கம் போல  … 8 வயது குட்டி தேவதை, கலகலப்பாக இருந்தவர் திடிரென்று”அம்மா… கடைக்கு போயிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்து வெளியே ஓடினாள்.

ஐந்து நிமிடம்… பத்து நிமிடம்… அரை மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை! தெரு முழுக்க தேடியாச்சு… கடை, கோவில், நண்பர்கள் வீடு… எங்குமில்லை!

பெற்றோரின் நெஞ்சு படபடக்க ஆரம்பிக்க . “ஐயோ… என் புள்ளைக்கு என்னாச்சோ?” என்று தாய் கதற… ஊரே பதறி அடித்து தெருவுக்கு வந்துவிட்டது.

அடுத்த நிமிடமே… அதிரடி ஆக்‌ஷன்!

அடுத்த நொடி கூட தாமதிக்காமல் குடும்பத்தினர் கதறியபடி ஆம்பூர் நகர காவல் நிலையத்துக்கு ஓடினர். புகார் கொடுக்கக்கூட நேரம் இல்லை… அதற்கு முன்னரே காவல்துறை களத்தில் இறங்கிவிட்டது!

விஷயம் காதுக்கு போனதும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்‌ஷய் அனில் வாகரே அவர்களிடம் இருந்து பறந்தது ஒரே ஒரு உத்தரவு…

இதையும் படியுங்க  6 மாதங்களாக பக்கா ஸ்கெட்ச்… அதிர வைக்கும் வீரமுத்துகிருஷ்ணனின் கொலை பின்னணி?

“உடனே மாவட்டம் முழுவதும் அலர்ட்! ஒரு நொடி கூட வீணாக்கக் கூடாது!”

அவ்வளவுதான்… திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையே களத்தில் இறங்கியது. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தகவல் பறந்தது. சுற்றுப்பகுதி சோதனைச் சாவடிகளில் எல்லாம் தீவிர கண்காணிப்பு. வேட்டை ஆரம்பமானது!

CCTV-யில் சிக்கிய அந்த ஒரு காட்சி!

போலீஸார் ஒவ்வொரு CCTV கேமராவாக அலச… அலச… அதில் ஒரு திடுக்கிடும் காட்சி! கண்டனர் 

காணாமல் போன சிறுமி ஆம்பூர் எல்லையை கடந்து… ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குள் பேருந்திலிருந்து இறங்கி தனியாக நடந்து சென்றது தெரியவந்தது!

அந்த ஒரு க்ளூ… அதுதான் 

அடுத்து புயல் வேகத்தில் போலீஸார் அந்தப் பகுதியை வளைத்தனர். ஒவ்வொரு தெருவிலும்… ஒவ்வொரு சந்திலும்… கண்ணிமைக்காத தேடுதல்!

கிளைமாக்ஸ்… 60-வது நிமிடத்தில்!

புகார் கொடுத்து சரியாக ஒரு மணி நேரத்திற்குள்…சிறுமி பத்திரமாக மீட்பு 

ஒரு கீறல் கூட இல்லாமல்… பாதுகாப்பாக சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தபோது… அந்தத் தாயின் கண்ணீரும், தந்தையின் நிம்மதிப் பெருமூச்சும்… அங்கிருந்த அத்தனை பேரையும் நெகிழ வைத்தது!

இதையும் படியுங்க  ராணிப்பேட்டை மகேஸ்வரி - செஞ்சி ஹேமலதா  தமிழகத்தை உலுக்கும் அடுத்தடுத்த குழந்தைகள் மாயம்... அதிகார வர்க்கம் மௌனம் சாதிப்பது ஏன்?

குழந்தையை கட்டியணைத்து அழுத அந்த தாயை பார்த்து கல் நெஞ்சும் கரையும்!

ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்ட திருப்பத்தூர் மாவட்ட போலீஸாருக்கு… ஊரே “ராயல் சல்யூட்” அடிக்கிறது…

பெற்றோர்களே கவனம்: குழந்தைகள் தனியே செல்லும்போது கவனமாக இருங்கள். சந்தேகமான நபர்கள் தென்பட்டால் உடனே 📞 112-க்கு அழையுங்கள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *