Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சமூக நீதி, சட்டம்- ஒழுங்கு, மக்கள் நலத்திட்டங்கள் எனப் பல்வேறு தளங்களில் திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து, தவெகவின் தகவல் தொழில்நுட்ப அணிவெளியிட்டுள்ள அறிக்கை, இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திமுகவை ‘ஸ்டிக்கர் ஆட்சி’ என்றும், ‘உதறல்நிதி அண்ட் கோ’ என்றும் மிகக் காரசாரமான வார்த்தைகளால் சாடியுள்ளது.

தவெக ஐடிவிங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.

ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, சாதி சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.

இதையும் படியுங்க  பாஜகவைவிட காங்கிரஸ் படுமோசம்.. ஸ்டாலின் முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம்… திமுக நிறைவேற்றிய தீர்மானம்..!

ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. சிக் ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் ஃபேமிலி ஃபண்ட் சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார். பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.

சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி” என தவெக ஐடி விங்க் கடுமையாக சாடி இருக்கிறது.

இதையும் படியுங்க  கை வைக்க முடியுமா..? திமுக தோல்விக்கு காரணம் 6 பேர் - ஆராய்ச்சிக் குழு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago