Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Election commision

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 7, 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியிலிருந்து மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் தவெகவில் இணைந்த சூழ்நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டருக்கிறது.

ஆறு பேர் இணைந்திருந்த போதிலும் இதுவரை மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மற்ற நான்கு தொகுதிகளுக்குமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இதனால் மதுரந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம். செப்டம்பர் 16ம் தேதி வேட்புமனு நிறைவு. செப்டம்பர் 17ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வாக்குப்பதிவு நாள்அக்டோபர் 6, 2026வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுஅக்டோபர் 9, 2026 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க  விஜய் டீம் ரெடி.. ஆனா எலெக்ஷன் ரெடி இல்ல! தமிழக இடைத்தேர்தல் தள்ளிப்போனது ஏன்?

மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உட்பட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தனர். இதில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, எவ்விதச் சட்டச் சிக்கலும் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக இந்த இடைத்தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளதால், இந்த இரு தொகுதிகளிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago