Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

முதலமைச்சர் நாற்காலி என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த மாநிலத்தின் பண்பாடு மற்றும் கண்ணியத்தின் பிரதிபலிப்பு. அதனால் தான், அந்தப் பதவியில் இருப்பவர்கள் மட்டுமன்றி, அவர்களின் குடும்பத்தினரும் பொதுவெளியில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைச் சமூகம் உற்று நோக்குகிறது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னவிஸ், யோகா நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடை இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னவிஸ், கடந்த சில மாதங்களாகவே சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாகி வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் உடைகள் அவ்வப்போது விவாதப் பொருளாகி வருகின்றன.

இந்நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற யோகா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், அம்ருதா ஃபட்னவிஸ் உடல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையிலான இறுக்கமான யோகா உடையை அணிந்து பங்கேற்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த உடையில் அவர் இருக்கும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்க  PBKS vs DC: 5 வீரர்கள் மாற்றம்.. களைத்துப்போட்டு ஆடும் டெல்லி கேப்பிட்டல்ஸ்..!

யோகா தொடர்பான நிகழ்ச்சிக்கு அவர் அந்த உடையைத் தேர்ந்தெடுத்தது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனாலும், இந்தியச் சமூகத்தின் மரபுசார் பின்னணியைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ​​இத்தகைய உடையை அணியும்போது அம்ருதா இன்னும் சற்று கவனத்துடன் இருந்திருக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இறுக்கமான உடைக்கு பதிலாக, சௌகரியமான, சமூகத்திற்குப் பொருத்தமான வேறு ஏதேனும் உடையை அவர் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னதாக, மும்பையில் நடைபெற்ற கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றிலும் அம்ருதா இதே போன்ற உடையை அணிந்திருந்தபோது இதேபோன்ற எதிர்வினைகள் எழுந்தன. ஆனால், அது அவர் விமர்சனங்களையெல்லாம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. ஏனென்றால், நேற்று மீண்டும் அதே பாணியிலான உடையையே அவர் அணிந்திருந்தார்.

யோகா நிகழ்ச்சிக்கு யோகா உடை அணிவது தப்பில்லை. ஆனால், இந்தியச் சமூகத்தின் மரபையும், தான் வகிக்கும் “முதல்வரின் மனைவி” என்ற பொறுப்பையும் உணர்ந்து, இன்னும் சற்று கண்ணியமான, சௌகரியமான உடையைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதே மேடையில் நடிகை ஸ்ரீலீலா எவ்வளவு எளிமையான, நாகரிகமான உடையில் வந்திருந்தார்? ஒரு சினிமா பிரபலத்திற்கு இருக்கும் சமூகப் பொறுப்பு, பொதுவாழ்வில் முன்மாதிரியாக இருக்க வேண்டியவருக்கு ஏன் இல்லை என்பதே பலரின் கேள்வி. ஏற்கனவே கடற்கரை தூய்மைப் பணியிலும் இதே போன்ற விமர்சனம் எழுந்தும், அதை அலட்சியப்படுத்தியது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படியுங்க  கேரள முதல்வர் வி.டி. சதீசன்..! கே.சி. வேணுகோபாலை வீழ்த்திய காங்கிரஸின் கேம் சேஞ்சர்..!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago