Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சீனா, இந்தியாவின் போட்டியாளர் அல்ல, மாறாக ஒரு கூட்டாளி என்று கூறியதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சமீபத்தில் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் நடந்த சந்திப்பின்போது இதனைக் கூறினார். ஆனாலும், நரேந்திர மோடி அரசிடம் இருந்து இதற்குப் பதில் வேண்டும் என ஒவைசி கோரியுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் அறிக்கை அடங்கிய ஒரு பதிவிற்குப் பதிலளித்த அசாதுதீன் ஒவைசி, “அது பிரச்சினையல்ல. இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்காக இந்தியா எல்லைப் பிரச்சினையை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சீனா விரும்புவதுதான் பிரச்சினை. ஆனால், அதற்குப் பதிலாக சீனா எதுவும் செய்யத் தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.

சீனாவின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய அசாதுதீன் ஒவைசி “சீனா, பாகிஸ்தானுக்கு நெருக்கமான செயல்பாட்டு இராணுவ ஆதரவை வழங்குகிறது. பிரம்மபுத்திராவின் நீரியல் தரவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது. சீனாவுக்கு சலுகைகளை வழங்குபவர்கள் நாம்தான். எல்லைப் பிரச்சினையில் முன்கூட்டியே அறுவடை ஒப்பந்தம் செய்வது உட்பட, சீனாவுக்கு சலுகைகளை வழங்குபவர்கள் நாம்தான். ஏன்? நரேந்திர மோடி அரசிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை,” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

இதையும் படியுங்க  “ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் மூடலா..? உண்மையா, வதந்தியா?”

சீனாவுடனான உறவுகள் குறித்து ஒவைசியின் பதிவில், ”அது சீனாவின் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டும் இருக்க முடியாது. சீனாவுடன் நல்ல, அமைதியான உறவுகள் அவசியம், ஆனால் அவை சீனாவின் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டும் இருக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவத் தளபதியை ‘சிறப்பு வாய்ந்தவர்’ என ஜே.டி. வேன்ஸ் அழைத்தது, இந்தியாவிற்கு என்ன அர்த்தம் தருகிறது?

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சீனாவுடன் இயல்பான, அமைதியான உறவுகளை விரும்புகிறார், ஆனால் இது சீனாவின் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே நடக்க முடியாது. இந்தியாவின் நலன்களே முதன்மையானதாக இருக்க வேண்டும், சீனாவுடனான உறவுகளை இயல்பாக்கும் பெயரில் அவற்றை புறக்கணிக்க முடியாது. இது எப்போதுமே எங்கள் கொள்கையாக இருந்து வருகிறது, இப்போது அதை மாற்றுவது பேரழிவாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

பிரிக்ஸ் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வந்திருந்தார். இந்தக் கூட்டத்தின் போது, ​​அவர் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்தார்.

இதையும் படியுங்க  "E20 வேணுமா? பியூர் பெட்ரோல் வேணுமா? மக்களுக்கு சாய்ஸ் கொடுங்க! - 2 லட்சம் மனுக்களுடன் பிரதமருக்கு கெஜ்ரிவால் விடுத்த அதிரடி சவால்!"

சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவின்படி, இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் நலன்களை மதிப்பதும், இரு நாடுகளின் தலைவர்களும் ஒருமித்த கருத்தை எட்டும் முக்கியப் பிரச்சினைகளைச் செயல்படுத்துவதும் மிகவும் முக்கியம் என்று வாங் யி கூறினார்.

இந்தக் கூட்டத்தில், இரு நாடுகளும் தங்கள் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தன. 2020 ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக பரஸ்பர மோதல் நிலை நீடித்தது. ஆனாலும், 2024 முதல், உறவுகள் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago