Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil mahesh

ரூ.100 கோடி பள்ளி வழக்கில் அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்கிற தகவல் முதல்வர் அலுவலக வட்டாரங்களில் பரவி வருகிறது. “அன்பில் மகேஷ் வழக்கில் இப்போது இருக்கிற சூழ்நிலையை லண்டனில் இருக்கும் முதல்வர் விஜய்க்கு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

Anbil makesh

அதாவது, ”அன்பில் மகேஷுக்காக சில பேர் முதல்வர் விஜய் தரப்பில் பேசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் விஜய் தரப்பில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அன்பில் மகேஷ் தரப்பு ரூ.170 கோடி அளவுக்கு வெவ்வேறு பெயரில் அக்கவுண்ட்டிலேயே பணம் வாங்கி இருக்கிறார்கள். அத்துடன் பள்ளிகூடங்களுக்கு அனுமதி கேட்டு வந்த நிர்வாகிகளிடம் அன்பில் மகேஷ் தரப்பு ‘பேக்கேஜும்’ பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ”உங்க பள்ளிக்கு பர்மிஷன் தர்றது எங்க டிபார்ட்மெண்ட். கட்டிட அனுமதி உட்பட மற்ற அமைச்சர்களின் துறைகளோட வேலைகளையும் சேர்த்து நாங்களே செஞ்சு கொடுக்கிறோம். அதுக்கு இவ்வளவு பணம்” என வாங்கி இருக்கிறார்கள் என்கிற தகவலும் முதல்வர் விஜய்க்கு தகவலாக சென்றிருக்கிறது.

இதையும் படியுங்க  CM விஜயின் 'சர்க்கார்' டீம் ரெடி! எந்த அமைச்சருக்கு எந்த துறை..?

இந்த வழக்கில் அரசகுமாருக்கும், அன்பில் மகேஷுக்கும் இணைப்பு பாலமாக இருந்தவர்தான் முத்துக்குமார். இவர் சிக்கினால் மாட்டிக் கொள்வோம் என்பதை அறிந்து முன்பே அன்பில் மகேஷ் தரப்பு முத்துகுமாரை வெளிநாட்டுக்கு குடும்பத்தோடு அனுப்பி பாதுகாத்து வருகிறது. ஆகையால் இன்னொரு வழியில் செக் வைத்துள்ளனர்.

Vijay

அன்பில் மகேஷ் அமைச்சராக இருந்தபோது பள்ளி கல்வித் துறை செயலாளராக இருந்தவர் சந்திரமோகன் ஐஏஎஸ். அப்போது தனியார் பள்ளிகள் தொடர்பாக ஒரு அரசாணை போட்டுவிட்டு அதை ஒரே வாரத்தில் கேன்சல் செய்து பழைய அரசாணை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த அரசாணை விவகாரத்தில் பெருமளவுப் பண வசூல் நடந்திருக்கிறது என்கிற புகார்கள் பதிவாகி இருக்கிறது. இந்த அரசாணை விவகாரத்தில் என்னதான் நடந்தது என்கிற மொத்த தகவலையும் சந்திர மோகன் ஐஏஎஸிடம் இருந்து வாங்கி இருக்கிறார்கள்.

ஆகையால் அன்பில் மகேஷ்க்கு எதிராக அரசகுமார், முத்துக்குமார், சந்திரமோகன் ஐஏஎஸ் வாக்குமூலங்கள் என வழக்கை உறுதியாக்கி இருப்பதால் அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். லண்டனில் இருக்கிற முதல்வர் விஜய்க்காக காத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  தமிழ் நாட்டின் சாபம்..! இது நியாயமா விஜய் சார்..? பவர் சென்டராகும் த்ரிஷா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago