Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே களத்தில் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. அதிமுகவில் இருந்து தாவி தவெகவில் ஐக்கியமான அதே முன்னாள் எம்.எல்.ஏ-க்களை மீண்டும் களமிறக்கியுள்ளார் விஜய்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து ஓடி வந்து தவெகவில் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கே மறுபடியும் சீட் கொடுத்துள்ளார்கள். இதை வைத்தே அதிமுகவினர் ”விஜய் கட்சி குதிரை பேரம் நடத்தியது என தலையில் அடித்துக் கொண்டோம். கண்டுக்கவே இல்லை. ஆனால் இதற்கு மேல உங்களுக்கு வேற என்ன சாட்சி வேணும்?” அவர்களுக்கே மறுபடியும் சீட் கொடுத்து இருக்கிறார்கள் என இதை காரணமாக வைத்து பிரச்சாரத்தில் இறங்கி, விஜய வைத்து செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதில் தாராபுரத்தில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என ஆளுங்கட்சி உளவுத்ததுறையே விஜய்க்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறதாம். இதை பார்த்த அதிமுக முக்கிய புள்ளிகள் எல்லாம் ”யோவ்.. இது நமக்கு ஒரு மெகா வரலாற்று வாய்ப்புயா? ஆனா நம்ம எடப்பாடி பழனிசாமி இப்பயும் பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இறங்கி வர மாட்டேங்கிறாரே” என புலம்பி தீர்க்கிறார்கள்.

இதையும் படியுங்க  "விஜய் ஒரு ஹிட்லர் முதல்வர்!" – 8 மணி நேர CCB ரெய்டுக்குப் பின் ஆவேசமாக சவால் விட்ட அன்பில் மகேஸ்!

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. எடப்பாடி தன்னோட பழைய கோபத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒதுங்கி இருக்கிற எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் இவர்கள் மூவரையும் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அத்தோடு சேர்த்து இந்த கட்சிக்கு வலு சேர்ப்பதற்காக சசிகலா அண்ட், தினகரனையும் ஒன்றாக இணைத்து ஒன்றிணைந்த அதிமுகவை இறக்கினால், இந்த இரண்டு தொகுதிகளையும் சுலபமாக தட்டி தூக்கிவிடலாம் என எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது பிரஷர் போட்டு வருகிறார்களாம்.

ஆனால் பொதுத்தேர்தலிலேயே பிடிவாதம் பிடித்த எடப்பாடி இந்த இடைத்தேர்தலுக்கு இறங்கி வருவாரா? என்பதுதான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago