வாழப்பாடி அருகே ஆறு வயசு சிறுவனுக்கு இரண்டு பேர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பெருமாள் பாளையம் பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவர் இவர் கிணற்று வேலை செய்து வருகிறார் இவரது மனைவி மற்றும் மகன் ஆறு வயதில் உள்ளார் இவரது மகன் நேற்று மாலை ஒரு மணி நேரம் 6 வயது சிறுவன் மாயமாய் உள்ளான்.
அக்கம் பக்கத்தில் அவர்கள் தேடிக் கொண்டிருக்கும்போது அங்கு அருகே உள்ள லோகேஸ் என்ற +1 முடித்த மாணவனும் , சென்னையில் கொத்து வேலை செய்து வரும் பிரசாந்த் என்ற இரண்டு வாலிபரும் அந்த சிறுவனை தனி அறையில் அடைத்து வாயில் கான்ஸ் போதை பொருள் கொட்டி அவனை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மதியம் ஒரு மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் குழந்தையை மீட்டு விசாரித்த போது வெளியாக்கிய தகவலின் அடிப்படையில் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த சிறுவனின் தந்தை பெருமாபாளையம் வெங்கடேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பு நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,
