Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக-விற்கும் தவெக-விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை; தமிழகத்தில் 3 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி பாஜக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

தவெக மா.செ-க்களின் பித்தலாட்டம்..! ₹80 கோடியை வாரிச்சுருட்டிய தூய சக்திகள்.. கடுப்பான CM விஜய்..!

புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதிலும், சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மேலிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இருப்பினும், இதுகுறித்த கேள்விகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமிதான் பதிலளிப்பார் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள நாராயணசாமி, எதிர்க்கட்சியாக இருந்து செய்யக்கூடிய பணிகளையே செய்து வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவரது நோக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்க  தவெக அரசுக்கு குழி பறிக்கும் கூட்டணி அமைச்சர்கள்..! கடும் ஆத்திரத்தில் பாஜக..! விஜய்க்கு சிக்கல்..!

விஜய் போட்ட கறார் ஆர்டர்… கழற்றிவிட்ட திமுக… எங்கே ஓடினார் செந்தில் பாலாஜி..?

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்றதுபோலவே, தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறியவர்கள், இரண்டு மாதங்களாகியும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சிங்கப்பெண் படைக்கு சீருடை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.

மேலும், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் கடந்த திமுக அரசுக்கும், தற்போது உள்ள தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 3 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு தமிழகத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

பெரும்பான்மை இல்லாத அரசு, ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக மற்ற கட்சிகளில் நடைபெறும் குழப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குறுகிய காலத்திலேயே தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைகின்றனர். அவர்களுக்குப் பின்னால் அரசின் அழுத்தமோ அல்லது ஆதரவோ இல்லையெனில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை. புதிய அரசு குதிரைப் பேரத்தில் மிக வேகமாக செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.

இதையும் படியுங்க  "சிஸ்டத்தை மாத்தணும்... சினிமாவை மீட்கணும்! முதல்வர் விஜய்க்கு சீனு ராமசாமியின் 6 ‘பவர்ஃபுல்’ கோரிக்கைகள்!"

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மாநில உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், கூட்டணியில் இருந்தபடியே கர்நாடக முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு என்ன தடை உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தற்போது ஆட்சியிலும் பங்குவகிக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலும் தமிழகத்தின் உரிமைகள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இரு மாநில அரசுகளும் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதற்காக நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க முடியாது. கர்நாடக காங்கிரஸ் அரசின் மீது மக்களிடையே அதிருப்தியும், ஊழல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன. அவற்றை மறைப்பதற்காகவே மேகதாது பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் என்றும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்வு காண ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடவில்லை. நதிகள் சீரமைப்பு போன்ற விஷயங்களில் அனைவரின் பங்களிப்பும் அவசியம். இதனை மாநில அரசு ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்க  "மார்க்கெல்லாம் போட முடியாது…"தம்பி விஜய் பட்ஜெட்-ல இவ்வளவு ஓட்டையா?" - வெளுத்து வாங்கிய பிரேமலதா!

இபிஎஸ்ஸுக்கு ‘லெட்டர்’ செக்… தவெக-விடம் ‘அல்வா’ பேக்… பாஜக-வுக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி..?

மக்கள் பிரச்சினைகளில் ஆளும் தவெக அரசு பாராமுகமாக இருந்தால், மிகப்பெரிய போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும்போது, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பிறகே அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றமே கூறியுள்ளது. இதை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

முதலமைச்சர் விஜய் பேசுவது உண்மையா, அல்லது சினிமா வசனங்களையா பேசுகிறார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் நேரடியாக பணம் கேட்டுள்ளனர் என்றும் அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

பணம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமித்தால், அவர்கள் அரசின் சொத்துகளையும் நலன்களையும் எவ்வாறு பாதுகாப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

-சக்திவேல்- புதுச்சேரி சிறப்பு நிருபர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago