Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நான்கரை வயது முதல் 11 வயது வரையிலான ஆறு குழந்தைகள் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இதில், ஐஸ் பாரில் தொடர்ந்து ஒரு மணி நேரம் 160 செக்கன்கள் இடைவிடாமல் செயல்பட்டு லாசிகா என்ற குழந்தை சாதனை படைத்துள்ளார். அதேபோல், ஹர்சித் என்ற சிறுவன் வாள் பாடம் நிகழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், 9 வயதுடைய வேகப்பிரபா, ஒற்றைக் காலில் நின்றபடி தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

ரித்திகா, 20 நிமிடங்களில் 20 யோகா ஆசன நிலைகளில் சிலம்பத்தை சுழற்றியுள்ளார். ஒவ்வொரு ஆசன நிலையிலும் ஒரு நிமிடம் நிலைத்திருந்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

தாரணியா, “பறவை நிலை” எனப்படும் யோகா நிலையில், இடைவிடாமல் தொடர்ந்து ஒரு மணி நேரம் சமநிலையுடன் செயல்பட்டு சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நான்கரை வயதுடைய காஷ்மீரா ஸ்ரீ, இரட்டை யோகா போஸில் தொடர்ந்து சிலம்பத்தை சுழற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்க  அமெரிக்கா மகனை பார்க்கப்போன பாசமலர்கள்..! வடலூர் வீட்டில் 103 சவரன் அம்போ..!

இந்தக் குழந்தைகள் இன்று நிகழ்த்தியுள்ள சாதனைகள் மிகப்பெரியவை. ஏனெனில், இந்த அளவிற்கு பயிற்சி அளித்து, குழந்தைகளை தொடர்ந்து தயார்படுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல், ஒற்றைக் காலில் நின்றபடி சிலம்பம் செய்வதும் எளிதான செயல் அல்ல.

மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவது எங்களின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, என்னுடைய மகள் ஏற்கனவே பல உலகச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவரை முன்மாதிரியாகக் கொண்டு, இதுபோன்ற மேலும் பல சாதனையாளர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago