https://republictn.com/

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசுகளின் வரியை குறைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேற்காசியாவில் நிலவி வரும் போர்சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் ரயில், மெட்ரோ மற்றும் பேருந்து கட்டணங்களையும் குறைத்து, பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago