https://republictn.com/

குறுகிய தொலைவு இலக்குகளை துல்லியமாக தாக்கும் அக்னி–I பாலிஸ்டிக் ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கிய அக்னி–I பாலிஸ்டிக் ஏவுகணை 700 கிலோமீட்டர் முதல் 1200 கிலோமீட்டர் வரை பாயும் திறன் கொண்டது. மேலும், 2500 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறனும் இதற்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள அக்னி–I ஏவுகணை, ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள சோதனைத் தளத்தில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஏவுகணையின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப தரநிலைகள் சோதிக்கப்பட்டன.

இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அக்னி–I ஏவுகணை துல்லியமாக தாக்கி வெற்றிகரமாக செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago