Durai murugan

ஆற்று மணல் என்றால் சும்மாவா? தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் சூடு பறக்கும் விஷயம் அது. இப்போது அந்த சூடு, தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பக்கம் திரும்பியிருக்கிறது.

2021 முதல் 2024 வரை நடந்த மணல் குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1,427,34,23,059 இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

வழக்கு எண் என்ன? யார் யார் மீது? லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையகத்தில் **குற்ற எண்: 08/2026**-ன் கீழ் வழக்கு பதிவாகியிருக்கிறது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியல் கொஞ்சம் நீளம் தான்:

முன்னாள் அமைச்சர்: துரைமுருகன் ஓய்வு முதன்மை தலைமைப் பொறியாளர்கள்: ஏ.முத்தையா, ராமமூர்த்தி

நீர்வளத்துறையைச் சேர்ந்த 14 அரசு ஊழியர்கள் , 10 தனியார் நபர்கள் / நிறுவனங்கள் மற்றும் பலர் மொத்தம் 24 பேர் FIR-ல் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள்

புகார் கொடுத்தது யார்? இந்த வழக்கு தானாக வந்தது அல்ல. இரண்டு தரப்பிலிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் பதிவாகியிருக்கிறது.

இதையும் படியுங்க  கைகழுவிய விஜய்..! இடியாப்ப சிக்கலில் எஸ்.பி.வி- சி.வி.சி அணி..! எடப்பாடியின் கள்ளச்சிரிப்பு..!

சென்னை அமலாக்கத்துறை (ED) அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் எஸ்.தமிழ்செல்வன்

அவர்கள் கொடுத்த புகாரை அமலாக்கத்துறை பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை களத்தில் இறங்கியிருக்கிறது.

என்ன நடந்தது? 3 முக்கிய குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதும் 28 ஆற்று மணல் குவாரிகள் தான் இந்த வழக்கின் மையம். அதில் முதற்கட்டமாக 4 குவாரிகளை மட்டும் எடுத்து ஆய்வு செய்ததிலேயே ரூ.1,427.34 கோடி இழப்பு கணக்கு வந்திருப்பதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது.

1. டெண்டரில் கைவரிசை: வெளிப்படையான ஓபன் டெண்டர் முறையைப் பின்பற்றாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பயன்படும் வகையில் ‘லிமிடெட் டெண்டர்’ மூலம் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

2. அளவுக்கு மீறிய மணல் கொள்ளை: அனுமதிக்கப்பட்ட கனிம திட்டத்தின் (Mining Plan) வரம்பை மீறி, அனுமதித்த அளவை விட கூடுதலாக சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு.

3. போலி பெர்மிட் சிலிப்: அனுமதிச் சீட்டு என்ற பெயரில் போலி வவுச்சர்கள் / பெர்மிட் சிலிப்களை தயாரித்து, அவற்றை உண்மையானவை போல பயன்படுத்தி மணல் கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  According to Centers for Disease Control (CDC) high quantities

இவை அனைத்தும் இப்போதைக்கு புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் தான். நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

### 34 இடங்களில் அதிரடி சோதனை! வழக்குப் பதிவு செய்த அதே நாளான நவம்பர் 6, 2026 அன்றே, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

சோதனை நடந்த இடங்கள்: சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி.

பறிமுதல் செய்யப்பட்டவை: 25 குற்றஞ்சாட்டும் ஆவணங்கள் , 11 மின்னணு சாதனங்கள் , 3 வங்கி லாக்கர் சாவிகள் அடுத்து என்ன? பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை தொடர்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

28 குவாரிகளில் 4 குவாரிகளுக்கே இவ்வளவு இழப்பு என்றால், மீதி 24 குவாரிகளையும் ஆய்வு செய்தால் தொகை இன்னும் பெரிதாகுமா? என்பது தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் எழும் பெரிய கேள்வி.

இதையும் படியுங்க  எதிர்க்கட்சிகளின் ஸ்கெட்ச் காலி! CM விஜய்யின் மாஸ் என்ட்ரி… அதிரும் கரூர் அரசியல்!"
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *