Theni

தேனி மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறையிலிருந்து (தெக்கம்பட்டி) 17 விசாரணை கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு பிரதான கதவு வழியாகத் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தமிழகக் காவல் துறை மற்றும் சிறைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘;;சிறைத்துறை டி.ஜி.பி-யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கைதிகள் சிறையிலிருந்து தப்பிக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். பின்னணியில் தங்கத்தை பெயராகக் கொண்ட அதிகாரி ஒருவர் இருக்கிறார்’ என்று கூறப்படுகிறது. பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பதாக, சிறைத்துறைக்குள் பரபரப்பான செய்திகள் உலாவுகின்றன.

Theni Jailbreak

“பல கோடி ரூபாய்க்குச் சொத்துகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் கைதிகளுக்கான நல வாரியத்தின் நிரந்தரத் தலைவராகத் தன்னை நியமித்துக்கொண்டாராம் சிறைத்துறையின் மாஜி அதிகாரி. இதற்காக, நல வாரியத்தின் விதிகளையெல்லாம் தங்கமான அதிகாரியுடன் சேர்ந்து திருத்தி இருக்கின்றனர். சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை இயக்குநராகப் பதவியேற்றதும், இது குறித்து நிறைய தோண்டினாராம். முறைகேடுகள் பளிச்சிட, அதையெல்லாம் விசாரிக்கச் சொல்லி உள்துறைச் செயலருக்குக் கடிதமாக அனுப்பினாராம். கூடவே, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தாராம்.

இதையும் படியுங்க  ”கதவை பூட்டி ED அதிரடி வேட்டை! சிக்கிய 5,000 கோடி மோசடி மன்னனின் 'பினாமி' சாம்ராஜ்யம்!

“அதன் பிறகுதான் சதி வலை பின்னப்பட்டதாகச் சொல்கிறார்கள். சிறைத்துறையில் இன்றைக்கும் கோலோச்சிக்கொண்டு இருக்கும் தங்க அதிகாரியும், வெளியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் சிலரும் சேர்ந்துதான், சந்தீப் ராய் ரத்தோரை துறையிலிருந்தே காலிசெய்ய முடிவெடுத்தனராம். தோதாக, சிறைக் கைதிகள் எஸ்கேப் விவகாரம் சிக்க, அதைவைத்து அவரை அங்கிருந்து கிளப்பிவிட்டனராம். இந்த மொத்த விவகாரத்தின் பின்னணியும் துறையை கவனிக்கும் அமைச்சருக்கு நன்கு தெரியுமாம்.

“நல வாரியத்தில் நடந்த பல கோடி முறைகேட்டைத் தட்டிக்கேட்டு, நியாயத்தின் பக்கம் நின்றதற்காக என்னை இப்படித் திட்டமிட்டுப் பலிகடா ஆக்கி வீழ்த்திவிட்டார்களே…” என்று தனக்கு நெருக்கமான பேட்ச் அதிகாரிகளிடம் சந்தீப் ராய் ரத்தோர் கதறிப் புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *