Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

church

ஆவணங்கள் இல்லாத மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது தற்பொழுது மாநிலத்தில் பெரும் விவாதத்தையும் அரசியல் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

தமிழகத்தில் சுமார் 25 முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக முறையான நிலவுரிமை ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வரும் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களுக்கு பட்டா வழங்க அரசு பரிசீலித்து வருவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்திருக்கிறார். வழிபாட்டு தளங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி தகுதியானவற்றிற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் துறை
அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்திருப்பதாகவும், அதற்கான ஆவணப்படிவங்கள் விரைவில் தொடங்கும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான வருவாயை இந்துக்களின் வரிப்பணமும் கோவில்களின் காணிக்கைகளும் தான் அரசுக்கு ஈட்டி தருகின்றன. ஆனால் இந்த வருவாயை பயன்படுத்தும் அரசு தமிழகத்தில் ஒருவேளை விளக்கேற்றுவதற்கான எண்ணெய்க்கு கூட வழியின்றி பாலடைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களை பற்றி பேசவோ, அவற்றை மீட்டெடுக்கவோ எந்தவித அக்கறையும் காட்டுவது இல்லை.

இதையும் படியுங்க  ”சாஹா எல்லையிலிருந்து தேச மங்கையர்க்கரசி விடுத்த அவசரக் கோரிக்கை!"

தனியார் அமைப்புகளை போல தன்னாட்சியாக செயல்படும் சர்ச் மற்றும் மசூதிகளின் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு மட்டும் விதிகளை வளைத்து நில உரிமைகளை வாரி வழங்குவது அப்பட்டமான பாரபட்சமாகும். இந்த இரட்டை நிலைப்பாடு இதில் மட்டுமில்லை. கல்விச் சலுகைகளிலும் அப்பட்டமாக தெரிகிறது. இஸ்லாமிய பெண்களின் படிப்புச் செலவிற்காக 2000 ரூபாய் வழங்கும் அரசு வறுமையில் வாடும் மற்ற மதங்களை சேர்ந்த ஏழை பெண்களின் கல்வியை பற்றி கவலைப்படுவதே இல்லை.

மக்களின் பொதுவான வரிப்பணத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே இப்படி வாறி இறைப்பது சமூக நீதி அல்ல. அதேபோல் இந்து கோவில்களின் பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி பிற மதத்தினர் உள்ளே நுழைவது குறித்து அறநிலைத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அவர் எம் மதமும் சம்மதம் என்றும் சமூக நீதி என்றும் மழுப்பலாக பேசி உண்மையை மறைக்கிறார். சர்ச் மசூதியை கோவில்கள் போல் அரசின் கீழ் கொண்டு வந்துவிட்டு சமூக நீதியை பேசலாம்.

இதையும் படியுங்க  பெற்றோரே மறக்காதீங்க! நாளை உங்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து!

பொது நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டுருந்தாலும் அதை மதிக்காமல் சிறுபான்மையினருக்கு பட்டா வழங்க துடிக்கிறது இந்த அரசு. இந்து கோவில்களில் மட்டும் பயன்படுத்தும் அதே எம்மதமும் சம்மதமும் என்ற கொள்கையை சர்ச் மற்றும் மசூதிகளுக்குள் புகுத்த துணியுமா என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. வருவாயை மட்டும் இந்துக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு சலுகைகளையும் நிலங்களையும் பிற மதங்களுக்கு வாரி வழங்கும் அரசின் இந்த துரோக போக்கை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு தமிழக பாஜாகா மற்றும் இந்து முன்னணி ஆகிய அமைப்புகள் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. சிறுபான்மையினரை திருப்தி படுத்துவதற்காகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், சட்ட விரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே அந்த நிலத்தின் உரிமையை அரசு பரிசாக வழங்க துணிகிறது என்று பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்
சாட்டி இருக்கிறார்.

இதையும் படியுங்க  கரூர் விவகாரம்... விஜய் மீது வழக்குப் போடச் சொன்னேன்... திருமா பகீர்! அலறும் தவெக!

மேலும் பொதுச்சொத்துக்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகள், கோவில், மசூதி, சர்ச் என எதுவாக இருந்தாலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பலமுறை தீர்ப்பு கொடுத்திருக்கும் நிலையில் அரசின் இந்த முடிவு அரசியல் சாசன சட்டத்தின் எல்லைகளை மீறும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதேபோல இந்த உத்தரவை பாரபட்சமானது என்று சாடியிருக்கும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அரசு நிலங்களில் இந்து கோவில்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றும் அரசு சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் பட்டா வழங்க முன்வருவது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago