Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Aadhar ID

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற இதுவரை ஆதார் அட்டை அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனிமேல் பஞ்சாயத்து ராஜ் துறை சார்ந்த நலத்திட்ட பலன்களை பெற வாக்காளர் அடையாள அட்டையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பும் தேவைப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதாவது இனி ஆதார் அட்டை மட்டும் கொடுத்தால் போதும் என்ற நடைமுறை இருக்காது. பயனாளிகள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எபிக் எண்ணையும் கைரேகை அல்லது கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களையும் வழங்க வேண்டும். இந்த இரண்டு தகவல்களின் அடிப்படையில் தான் பயனாளியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நலத்திட்ட பணிகள் வழங்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 30 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற மக்கள் திட்டமிடல் பிரச்சாரத்துக்கான தேசிய பயிலரங்கில் இந்த அறிவிப்பு வெளியானது. இதுவரை ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் இனிமேல் ஆதார் முதன்மையான அடையாள ஆவணமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். அரசின் நலத்ததிட்டங்களில் அடையாள சரிபார்ப்பு என்பது புதிய விஷயம் கிடையாது. தகுதியான நபர்களுக்கே உதவிகள் கிடைக்கிறதா? போலியான பயனாளிகள் மூலம் அரசு விதி தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க இத்தகைய நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்க  "3 உடல்கள்... ஆனா ஒரே ஆன்மா! மேடையை அதிரவைத்த அனந்த் அம்பானி... கண் கலங்கிய முகேஷ் அம்பானி!"
voter ID

தற்போது இந்த நடைமுறையை வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றி அடையாள சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் நேரத்தில் கிராம பஞ்சாயத்துகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பிரதான்மந்திரி விக்சித் கிராம் ஸ்வராஜ் யோஜனா என்ற திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2026- 27 முதல் 2030 -31 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு மொத்தம் 7395 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதும் சுமார் 32 லட்சம் பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதும் இதன்
முக்கிய நோக்கங்களாகும்.

இதன் கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் தங்கள் பகுதியில் என்னென்ன வளர்ச்சி பணிகள் தேவை என்பதை மக்களுடன் ஆலோசித்து ஆண்டு திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். குடிநீர், சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே திட்டமிடல் முறைக்குள் கொண்டுவரவும் முயற்சி செய்யப்படும். பஞ்சாயத்துகளின் நிதி கணக்குகள் ஆன்லைன் தணிக்கை மற்றும் டிஜிட்டல் நிர்வாகமும் மேம்படுத்தப்படும். மேலும் வாக்காளர் அட்டை மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு எந்தெந்த நலத்ததிட்டங்களுக்கு பொருந்தும் எப்போது இந்த நடைமுறை தொடங்கும் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் எப்படி பலன் பெறுவார்கள் போன்ற விவரங்கள் வெளியாக்க வேண்டியுள்ளது.

இதையும் படியுங்க  17 வயது சிறுமியை சீரழித்த மத்திய அமைச்சரின் மகன்..! ரூ.5 கோடிக்காக நடந்த ஹனிட்ராப்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 minutes ago at 57 minutes ago