Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Seeman

அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்படும் விவகாரங்களை விட, ஏன் சீமான் அங்கே நிற்கிறார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தலில் சீமான் இருங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

இவருக்கு திமுக ஆதரவு தருமா? என்பதை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு சொல்கிறேன் என ஸ்டாலினும் சொல்லி இருக்கிறார். சீமானை பொது வேட்பாளராக அறிவிக்கலாமா? என எதிர்க்கட்சிகள் யோசனை செய்வதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில இந்த தொகுதியில் மறவர், நாடார் சமூக வாக்குகள் அதிகம் இருப்பதால் சீமானின் மனைவி மறவர் சமூகமும், சீமான் நாடார் சமூகமாக இருப்பதால் அம்பாசமுத்திரத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்கிறது நாதக.

seeman

இன்னொரு பக்கம் சீமான் நிற்பதற்கான வேறொரு காரணத்தையும் அவரது தம்பிகள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து ஆறு சட்டமன்ற தேர்தல்களை சந்தித்து 2026 தேர்தல் வரைக்கும் எல்லா தேர்தல்களையும் போட்டியிட்டது சீமான், சீதாலட்சுமி, சிவசங்கர் என மூன்றே பேர்தான். நாம் தமிழர் கட்சி உருவான காலத்தில் இருந்து சீமானுக்கு நெருக்கமாக இருந்து வருகிறார் சிவசங்கர். கடைசியாக அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டார் சிவசங்கர்.

இதையும் படியுங்க  சீமானுக்கு கார் வாங்கிக்கொடுத்தது யார்..? திரள் நிதியில் பென்ஸ் காரா..? உடையும் உண்மைகள்..!

இவர் எந்த தொகுதிக்கு போனாலும் அங்கு தன் பாணி பிரச்சார வியூகங்களால் கணிசமான வாக்குகளை குவிப்பார். கூடவே கட்சிக்கும் அந்த தொகுதியில் நல்ல பேஸ்மென்ட் போடுவார். அப்படித்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் சிவசங்கர், சீமானுக்கு அடுத்து பெரிய வாக்கை பெற்றார். இதனால் தான் சீமான் நிற்பதை அவரோட தம்பிகள் பிளஸ் எதிர்க்கட்சிகள் எல்லாம் சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால் இடைத்தேர்தல் களம் என்பது சீமான் தம்பிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago