விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதாவின் மாயம், ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சிறுமி காணாமல் போய் இன்றுடன் 22 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், இன்னும் எந்தவொரு துப்பும் கிடைக்காதது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியரின் மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு, தனது 7-வது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார். அதன்பின், பெற்றோர் மற்றும் தம்பியுடன் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் அதிகாலை வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பவானி எழுந்து பார்த்தபோது, படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஹேமலதாவைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாவட்ட எஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 120-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 10 நாட்களாக கிராமத்தைச் சுற்றியுள்ள கிணறுகள், ஏரிகள், கரும்புத் தோட்டங்கள் மற்றும் மலைக் குன்றுகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாகத் தேடினர். எனினும், சிறுமி குறித்து எந்தவொரு தடயமும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை.

உள்ளூர் போலீசாரின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் ஆலம்பூண்டியில் தற்காலிக முகாம் அமைத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு பல நாட்கள் கடந்தும் சிறுமியைப் பற்றிய எந்தவொரு முன்னேற்றமும் இல்லாதது அவளது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளதுசரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரை என்பவரது நண்பர் அரவிந்திடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே ராஜதுரையிடம் விசாரணை நடத்திய நிலையில், அரவிந்தை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிபிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
