Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

BLM PremKumar

தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், BLM பிரேம்குமாருக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பி உள்ளார்.

“பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் முதலமைச்சரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தவெகவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் – ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?” என சந்தேகம் கிளப்பி உள்ளார் உதயநிதி.

BLM Prem kumar

இந்நிலையில், ”5000 கோடி ரூபாய் முதலீட்டைச் சுருட்டித் தன் சொந்தக் கணக்கில் பதுக்கிய BLM பிரேம்குமாரைக் கேரள காவல்துறை கைது செய்துள்ள நிலையில்… அந்த மாபெரும் மோசடிப் பேர்வழியுடன் ‘டம்மி’ முதலமைச்சர் விஜய்க்கு என்ன ரகசியக் கூட்டணி?

இதையும் படியுங்க  பதற வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்! நடுங்கும் விஜய்..! தவெகவின் 'மாஸ்டர் பிளான்..'!

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எம்.எல்.ஏ-க்களை கூட்டிவந்தது இதே மோசடிப் பேர்வழி பிரேம்குமாருக்குச் சொந்தமான பேருந்துகளில்தானே? தவெக நிகழ்ச்சிகளுக்கும் இவரது பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதன் மர்மம் என்ன?

கூட்டனிக்கு ‘சோபா’ சப்ளை செய்தது, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியது, இடைத்தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்தது, என ஒட்டுமொத்த தவெகவின் ஜனநாயகப் படுகொலைகளுக்கும் ஃபைனான்ஸ் செய்தது மக்களின் இரத்தத்தை உறிஞ்சிய இந்த 5000 கோடி ஊழல் பணம்தானா?” என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago