Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

எம்ஜிஆர் மாடலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு அதிகாரிகளை வைத்து உயிரூட்டலாமா? என யோசிக்கிறாராம் முதல்வர் விஜய். ஒரு பக்கம் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேற்று கட்சி நபர்கள் தவெகவுக்கு படையெடுத்துக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் வார்டு எல்லைகளை மறுவரை செய்கிற வேலைகளையும் துவக்கி இருக்கிறார்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமா என்கிற கேள்வி முதல்வர் விஜய் மனதில் ஓடிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

காரணம் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்ததே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் என முதல்வர் நம்புகிறாராம். குறிப்பாக மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள், தமிழ்நாடு முழுக்க இருந்த திமுக கவுன்சிலர்களின அலப்பறைகளால் பொதுமக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என முதல்வருக்கு அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்களாம்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசங்கள் நேரடியாக மக்களை பாதிக்கும். அது ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். அவர்களை கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டம் என உளவுத்துறையில் இருந்தும் முதல்வருக்கு சொல்லப்பட, எம்ஜிஆர் பாணியில் அதிகாரிகள் மூலம் உள்ளாட்சிகளில் நல்ல நிர்வாகத்தை கொடுக்கலாம் என யோசிக்கிறாராம் முதல்வர் விஜய்.

இதையும் படியுங்க  வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே முடியல..! எடப்பாடிக்கு இடி மேல் இடி..! உளவு பார்க்கும் விஜய்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago