அதிகாரம் இல்லாத பதவியில உட்கார வைக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டு இருக்கிற ஒரு ஐஏஎஸ் அதிகாரி குறிப்பிட்ட துறைகள் பற்றிய ரகசியங்களை சில யூடியூபர்கள் மூலமாக வெளியே கசிய விடுவதாகக் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அதிமுக, திமுக என எந்த ஆட்சி என்றாலும் ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் முக்கியமான பதவிகளில் இருப்பார். தேர்தல் முடிவுகள் வெளியாகி புது அரசு பதவி ஏற்பதற்கு தாமதமான அந்த இடைவெளியில் கட்டுமான நிறுவனங்களுக்கு ஏகத்துக்கும் அனுமதி கொடுத்து பெரிய அளவில் கல்லா கட்டி விட்டதாக கூறப்படுகிறது. புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட தவெக அரசு அவரை பற்றிய விவகாரங்களை தெரிந்து கொண்டு உடனே அதிகாரம் இல்லாத பதவிக்கு அவரை தூக்கி அடித்தது.

”என்னை எங்கே தூக்கிப் போட்டாலும் பவரான இடத்துக்கு எப்படி வருவது என எனக்கு தெரியும்” என நண்பர்கள் வட்டாரத்தில சவால் விட்டு இருக்கிற அவர் தான் ஏற்கனவே இருந்த பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் நடக்கிற பல விவகாரங்களை அங்கே இருக்கிற தனது ஆட்கள் மூலமாக தெரிந்து கொண்டு ஒரு சில யூடியூபர்கள் மூலமாக பேச வைப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அனுமதியே கொடுக்காத சில திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தாச்சு என பேச வைக்கிறாராம். இது ஆளும் தரப்பு மீது ஊழல் சாயம் பூசுவதற்கான முயற்சி என்கிறார்கள். வார் ரூம் வைக்காத குறையாக யூடியூப் நிறுவனங்களுக்கு லட்சங்களை கொடுத்து பேச வைப்பதாகக் கூறப்படுகிறது.
எல்லாமே ஆளுங்கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிற மாதிரியான கண்டென்ட்களாக கிரியேட் செய்ய சொல்வதாகக் கூறப்படுகிறது. இதை தீவிரமாக கண்காணித்து வருகிற ஆளுங்கட்சி விரைவில் ஒரு அதிரடியை அரங்கேற்ற காத்திருப்பதாவும் கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
