Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் இன்று ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் ஆய்வு – தனது முதல் ஆய்விலேயே குறைகளை பட்டியலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் இன்றுமாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகம், நோயாளிகளின் படுக்கைவசதி, மருத்துவமனை தூய்மை, பராமரிப்பு போன்றவற்றை ஆய்வுசெய்ததுடன் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் இடவசதி குறித்து மருத்துவ அதிகாரி அருட்செல்வன் மற்றும் மருத்துவர் விக்னேஷிடம் கேட்டறிந்ததுடன், நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

பிரச்சாரத்தின் போது மக்களை சந்தித்ததில் அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லாதது குறித்து அவர்கள் தெரிவித்த குறைகளின் அடிப்படையில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டதாகவும், 100ஆண்டுகள் பழமையான இந்த மருத்துவமனை கட்டிடத்தில் மழை தண்ணீர் உள்ளே விழுவது போன்ற பல குறைபாடுகள் உள்ளது, போதிய கட்டிட வசதி இல்லை என்றும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்தஇடம் இருப்பதால் கட்டிடங்களை இடித்துவிட்டு கட்டுமானபணி மேற்கொள்வது என்பது இயலாத காரியம் என்ற நிலையில், 85 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது 157வரை படுக்கைவசதிகள் ஏற்படுத்தலாம் என உத்தரவு இருந்தாலும் அதற்கான வசதிகள் இல்லை, இங்குள்ள 2கட்டடங்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது அந்த இடத்தில் புதிய படுக்கைவசதிகள் கூடுதலாக ஏற்படுத்தித்தரவேண்டும் கடந்த ஆட்சியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு அதனை நிறைவேற்றப்படவில்லை.

இதையும் படியுங்க  "அக்கா மகளுக்கே இந்த கொடூரமா? 5 லட்சத்தை சுருட்டிட்டு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய டாக்டர் மாமன்!"

தினசரி 12- 15 அவசர சிகிச்சைக்கு என நோயாளிகள் அனுமதிக்கப்பட்டாலும், 3-5 நோயாளிகள் மிகவும் சீரியஸ் நிலைமையில் வந்தாலும் அவர்களுக்கு வென்டிலேட்டர் வசதி இல்லை ஐசியூ வசதியில்லை, ஐந்து பேரும் உயிருக்கு போராடும்நிலையில், நோயாளிகளுக்கு வசதிகள் இல்லாததால் தலைமை மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பும்நிலை உள்ளது, அவர்களது உயிர் கேள்விக்குறியான நிலை உள்ளது அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திதந்தால் அவர்களது உயிரை காப்பாற்றமுடியும்.

மருத்துவர் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் ஒரு மருத்துவர் 600 நோயாளியை பார்ப்பது என்பது இயலாத காரணம் மேலும் 21 செவிலியர்கள் மட்டுமே உள்ளன போதுமான டாக்டர் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் அதிக வேலைப்பளு உள்ளது.

லேப், எக்ஸ்ரே போன்ற கூடுதல் மருத்துவவசதிகள் மற்றும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதும் 2013 ஆம் ஆண்டுக்கான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கையே உள்ளது, பிற்பகலில் வரும் நோயாளிகள் CT ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்கமுடியாத நிலை உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குபவர்களுக்கு என தனியார் பராமரிப்பில் தங்கமிடம் இருந்தாலும், தங்குமிடம் இருக்கிறதா என்பது கூட பலருக்கு தெரியவில்லை, இங்கு உள்ள கழிப்பறைகள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்யவும் மேற்கத்திய டாய்லெட்களை மாற்றி இந்தியன் டாய்லெட் வசதி ஏற்படுத்தித்தரவும் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இதையும் படியுங்க  60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உதவித்தொகையா? தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு!

பல இடங்களில் நோயாளிகளிடம் பணியாளர்கள் பணம்வாங்கும் நடவடிக்கை உள்ளதாகவும் இதுதொடர்பாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவித்துள்ளதாகவும், வரும்நாட்களில் இது களையப்படும் என்றார்.

அரசிடம் தெரிவித்து மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும், மக்களுக்கான அரசாக இது செயல்படும், மக்களின் குறைகளை கேட்டறிந்த அதனை நடவடிக்கை தீர்க்கவும் முதல்வர் தெரிவித்துள்ளார், மக்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனைனை உடனடியாக தெரிவிக்கலாம், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேலும் திரைப்படங்களில் வருவது போல ஒரே நாளில் இது சரி செய்ய முடியாது, எல்லோரும் சேர்ந்து தான் இதனை முடிவு செய்ய வேண்டும் அதன்பிறகு கலந்தாலோசித்து கூடியசீக்கிரம் நடவடிக்கைஎடுக்கப்படும், இந்த மருத்துவமனையை வேறு இடத்தில் மாற்றலாம் என்றாலும் ஸ்ரீரங்கம் பகுதியில் வருவாய்த்துறை மூலம் நான்கு ஏக்கர் பரப்பளவு உள்ள இடங்கள் உள்ளதா என ஆய்வு செய்தும் மாநகர பகுதிகளில் இடமில்லை, சோமரசம்பேட்டையிலேயே நான்கு ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது முதல் ஆய்விலேயே பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றதால் மருத்துவர்கள் மத்தியிலும் செவிலியர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்க  "சினிமால மட்டும் இல்ல.. அரசியலிலும் நான் தான் கிங்! சொத்து பட்டியலில் மிரட்டும் சிஎம் விஜய்.. வியக்க வைக்கும் ADR அறிக்கை!"

-ஜான் கண்ணா, திருச்சி, சிறப்பு நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago