Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாடு அரசின் புதிய ஆட்சி அமைந்து இன்று ஐந்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்கள் எழுந்துள்ளன.

பதவி ஏற்ற முதல் நாளிலேயே, முதல்வர் விஜய் அவர்கள் கஜானா காலியாகிவிட்டது எனவும், அதற்கான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, உண்மையில் கஜானா காலியாகிவிட்டதா? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அரசுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது குறித்து பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் 2025–26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, மொத்த வருவாய் 3,31,569 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை 365 நாட்களால் வகுத்தால், மாநிலத்தின் ஒரு நாள் சராசரி வருவாய் சுமார் 98 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

வருவாய் மூலங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதில், வணிக வரி மூலம் 1,21,853 கோடி ரூபாய் (36.8%) வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் 39,478 கோடி ரூபாய் (11.9%) வருவாய் கிடைக்கிறது.

இதையும் படியுங்க  "தூத்துக்குடியை உலுக்கிய அருணாச்சலம் மரணம்… வெளியான மரண வாக்குமூல வீடியோவால் பரபரப்பு!"

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் 38,572 கோடி ரூபாய் (11.6%) வருவாய் கிடைக்கிறது.

பதிவுத்துறை (ஸ்டாம்ப் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன்) மூலம் 25,567 கோடி ரூபாய் (7.6%) வருவாய் கிடைக்கிறது.

வாகன வரி மூலம் 11,617 கோடி ரூபாய் (3.5%) வருவாய் கிடைக்கிறது.

மின்சார வரி மூலம் 9,180 கோடி ரூபாய் (2.8%) வருவாய் கிடைக்கிறது.

மத்திய அரசின் வரி பங்காக 66,543 கோடி ரூபாய் (20%) கிடைக்கிறது. மத்திய அரசின் நிதி உதவியாக 10,590 கோடி ரூபாய் (3.2%) கிடைக்கிறது.

மேலும், பிற வருவாய் மற்றும் சேவை வரிகள் மூலம் 8,669 கோடி ரூபாய் (2.5%) வருவாய் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 3,31,569 கோடி ரூபாய் மொத்த வருவாயாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், ஒரு நாள் வருவாய் சுமார் 98 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago