Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbumani

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இப்போது வரை இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவோம் என வாயை திறக்கவே இல்லை. செப்டம்பர் 16 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ”எங்களோட நிலைப்பாட்டை சீக்கிரமே அறிவிப்போம்” என ரொம்பவே மழுப்பலாக சொல்லி விட்டு போய் விட்டார். பாமக தரப்பில் நாம் விசாரித்தபோது, ”மதுராந்தகம் தனி தொகுதியாக இருந்தாலும் அங்கு வன்னியர்கள் அதிகம். அதனால தாராபுரத்துல அதிமுகவும், மதுராந்தகத்துல பாமகவும் போட்டியிடலாம் என அன்புமணி ஆரம்பத்திலயே மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார். ஆனால் அதிமுக தரப்பில இருந்து இதுக்கு எந்த பதிலுமே கொடுக்கவில்லை.

Republic Tamil

அதுமட்டுமில்லாமல் கடந்த தேர்தலில் அதிமுக ஜெயிச்சதுக்கு பாமகதான் காரணம் என சி.வி.சண்முகம் பேசியதை அதிமுகவினர் சி.வி சண்முகத்தை கண்டிக்கிறோம் என்கிற பேரில் பாமகவையே போட்டு தாக்கிவிட்டார்கள். இதனால் இரண்டு கட்சிக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியே விழுந்து விட்டது. முன்பு சி.வி.சண்முகம் அதிமுகவில் கெத்தா இருந்தபோது பாமக கூட பேசி சமாதானம் செய்து விடுவார்.

இதையும் படியுங்க  தனித்து விடப்பட்ட திமுக… ஓரம் கட்டப்பட்ட நாதக..! ஸ்டாலினுடன் கைகோர்க்கும் சீமான்..!
Republic Tamil

ஆனால் இப்போது அவர் எடப்பாடி முகாமில் இல்லாததால் இந்த பொறுப்பை கே.பி.முனுசாமியிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கே.பி.முனுசாமிக்கும், அன்புமணிக்கும் ஏற்கனவே ஆகாது. இதனால் பேச்சு வார்த்தையே நடக்காமல் இழுபறியாவே போய்க்கொண்டு இருக்கிறது. செப்டம்பர் 17 ஆம் தேதியான நேறு தியாகிகள் தினத்தை முன்னிட்டு ராமதாஸை சந்தித்த அன்புமணி அப்பா சொன்ன அந்த அட்வைஸையும் கேட்டுவிட்டு அதன்பிறகு தன்னோட முடிவை அறிவிப்பார் எனச் சொல்கிறார்கள். இந்த இழுபறியை பார்த்த ஆளுங்கட்சியான தவெக ”அண்ணே அப்படியே நம்ம பக்கம் வந்துருங்கண்ணே” என அன்புமணிக்கு தூண்டில் போட்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago