தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பங்கள், அறிவாலய வட்டாரங்களை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் அமைச்சர் அமைச்சர்களான அன்பில் மகேஷ், மூர்த்தி, சேகர்பாபு போன்றோரைதான் முதல்வர் விஜய் குறி வைத்து இருக்கிறார் என கூறப்பட்டது. இப்போது திமுக பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு குறி வைத்திருக்கிறார் விஜய் என்கிறார்கள்.

இப்போது திமுகவின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான துரைமுருகனை நோக்கி முதல்வர் விஜய்யின் பார்வை திரும்பியிருப்பதாகப் பரவும் தகவல்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. ஏற்கனவே 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளைக் குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனைகள் அரசியல் களத்தை உலுக்கின.
அதில் துரைமுருகனுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் ரூ.4,700 கோடி அளவிற்கு பிரம்மாண்ட மணல் குவாரி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் இந்த வழக்கைத்தான், தற்போது முதன்மை ஆயுதமாக விஜய் கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான திமுகவின் மீது ‘ஊழல் சாயம்’ பூசி, மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கைக் குறைப்பதே விஜய்யின் முக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.அன்பில் மகேஷ் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், துரைமுருகன் விஷயத்தில் அமலாக்கத்துறையின் பழைய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் தூசி தட்டப்பட்டு வருகின்றன.
கோட்டை வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின்படி, அடுத்த சில நாட்களில் இந்த மணல் குவாரி வழக்கு வேகம் எடுக்கும் என்றும், துரைமுருகனுக்கு எதிராக சட்டரீதியான அடுத்தகட்ட அதிரடி பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் இந்த ஊழல் புகார்களை பிரசாரப் பொருளாக மாற்றி, திமுகவை முற்றிலுமாக முடக்குவதற்கு முதல்வர் விஜய் தீட்டியுள்ள இந்த மாஸ்டர் பிளான் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
