Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு மே மாத இறுதியில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் நேரம் கோரப்பட்டிருந்ததாகவும், அதன் அடிப்படையில் மே மாத இறுதியில் அல்லது இறுதி வாரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டிற்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மற்றும் மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால், பிரதமருடன் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதோடு, டெல்லி பயணத்தின் போது பல்வேறு மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க  விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்..! அந்த 2 பேர்..! வெளியானது பட்டியல்..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago