Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அந்த அறிவிப்பு வந்திருக்கிறது. மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இரண்டும் தனி தொகுதிகள் வேறு.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டுமே தனித்தொகுதி என்பதால் வி.சிகவின் ஆதரவு என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் அரங்கில் பார்க்கப்படும். இந்த ஆட்சியை மக்கள் சீர்தூக்கி பார்க்க போகிறார்கள். அதை தாண்டி மற்ற விஷயங்களை தமிழக வெற்றி கழகத்தினுடைய பார்வையிலும் பார்க்கும்போது அவர்களுக்கு 107, 108ல் திருச்சி கிழக்கு விஜய் ராஜினாமா செய்த பிறகு 107 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.

ஒருவேளை இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் அவர்கள் தனிப்பட்ட முறையில் தமிழக வெற்றி கழகத்தினுடைய எண்ணிக்கை 109-ஐ எட்டும். இன்னுமம் ஒன்பது இருந்தால் 118ல் ஒரு தனிப்பட்ட ஆட்சி என்கிற நிலை வரும். ஆனாலும் கூட தங்களுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடைய எண்ணிக்கை அதிகம் என்பது எந்த கட்சிக்குமே கூடுதல் நம்பிக்கையும், கூடுதல் பலத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இந்த 2 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தான் நிற்க போகிறார்களா? விசில் சின்னம் தான் நிற்க போகுகிறதா? கூட்டணி கட்சிகளா? என்கிற கேள்வி எழுகிறது,

இதையும் படியுங்க  விஜய் அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! பசு வதை தடைக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை!

இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறது என்கிற கலாச்சாரம் இதுவரை தமிழ்நாடு அரசியலில் பெருவாரியாக இல்லை. அவர்கள் தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தவர்களாக இருந்தாலும் கூட திமுகவோ, அதிமுகவோ இடைத்தேர்தல் என வரும்போது அவர்களுடைய வேட்பாளரைத்தான் போட்டியிட வைப்பார்கள். அந்த வகையில் இரண்டு தொகுதிகளில் விசில் சின்னத்தில் அவர்களது வேட்பாளர்களே போடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி விசில் சின்னத்தில் நிக்கக்கூடிய வேட்பாளர்கள் யார்? அதே மதுராந்தகம் மரகதம் குமரவேலுக்கும், அதே தாராபுரம் சத்தியபாமாவுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா?

அப்படி நிறுத்தப்படுவார்கள் என்று சொன்னால் கட்சி தாவல், குதிரை பேரம் மாதிரியான விமர்சனங்களை தவிர்க்க முடியுமா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இவர்களை தவிர்த்துவிட்டு வேறு ஒரு வேட்பாளரை விசில் சின்னத்தில அந்த இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நிறுத்த போகிறார்களா? என்கிற கேள்வி இருக்கிறது. இது தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை… எதிர்கட்சிகளை பொறுத்தவரை திமுகவும், அதிமுக, நாம் தமிழர் இந்த மூன்று கட்சிகளும் இந்த இடை தேர்தல்களை எப்படி அணுகும் என்கிற கேள்வி இருக்கிறது.

இதையும் படியுங்க  திமுக தயவில் தான் விஜய் ஆட்சி..! திமுக வெற்றிக்காக வெறிகொண்டு அலைந்தது இல்லை- மு.க.ஸ்டாலின்..!

எப்படி பார்த்தாலும் நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் நிற்க மாட்டோம். புறக்கணிக்கிறோம் என இதுவரைக்கும் சொன்னதே இல்லை. இடைத்தேர்தலில் நாம் தமிழர் போட்டியிடுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயம். இந்த முறை சீமான் வேற நிலைப்பாடு எடுக்க போகிறாரா என்பது தெரியவில்லை. திமுக, அதிமுக என்ன செய்யப் போகிறது? இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். ”எங்க எம்எல்ஏ தான் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. ஆனா தேவையில்லாம அவங்க இடம் மாறிட்டாங்க. அதனால இத நாங்க எப்படி எதிர்கொள்றது? என அதிமுக கேள்வி கேட்குமா? இல்லை இது எங்கள் எம்எல்ஏக்கள் இருந்த இடம். அதனால நாங்கள் போட்டியிட்டு இந்த தொகுதிகளை மீட்டே ஆக வேண்டும் என்று இரட்டை இலை சின்னத்தில் ஆறு வேட்பாளர்களை அதிமுக களம் இறக்குமா? என்கிற கேள்வி எழுகிறது.

இது அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியதால் ஏற்பட்ட பஞ்சாயத்து. இதில் திமுக, ”நாங்க எதுக்கு இதுல நிலைப்பாடு எடுக்கணும்?” நாங்க இந்த தேர்தல் தேவையற்ற ஒரு தேர்தல் திணிக்கப்பட்ட ஒரு தேர்தல்” எனச் சொல்லி நாங்கள் புறக்கணிக்கிறோம் என திமுக சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அல்லது இதுதான் எங்களுக்கான வாய்ப்பு. இந்த ஆட்சி சரியில்லை. நான்கு, ஐந்து மாதங்களாக நிறைய தவறுகள் செய்திருக்கிறார்கள். மக்களிடம் நாங்க எக்ஸ்போஸ் பண்ண போறோம். இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்று காட்டி மக்களுக்கு இந்த ஆட்சி மேல அதிருப்தி இருக்கு அப்படிங்கறத நாங்க காட்ட போறோம்” என திமுக களம் இறங்க போகிறதா?

இதையும் படியுங்க  முதல் தேர்தலிலேயே CM..! அடுத்த டார்க்கெட் இந்திய அரசியலா..? விஜய் மாஸ்டர் ஸ்கெட்ச்..!

அல்லது பேசப்பட்டது போல பொது வேட்பாளர் மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடக்க போகிறதா? பொது வேட்பாளராக அறிவிக்காமல் வேற விதமாக ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் இரண்டு, மூன்று கட்சிகள் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? எது எப்படி இருந்தாலும் மீண்டும் தேர்தல் ஜொரம் தமிழ்நாட்டில் பற்றிக் கொண்டிருக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago