முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகள் நங்கூரம் போட்டு உட்கார்ந்திருந்த கே.என். நேரு மீது ஆள் எடுப்பதற்கு லஞ்சம், கான்ட்ராக்ட் கொடுப்பதற்கு கமிஷன், அது இது என அமலாக்கத்துறை பயங்கர குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்திருனந்தது.
இப்போது இதை அடிப்படையாக வைத்து தவெக-வின் லஞ்ச ஒழிப்பு துறை, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 12 பேர் மீது எஃப்ஐஆர் போட்டு தூக்க இருக்கிறார்கள். செப்டம்பர் ஐந்தாம் தேதி காலையில் 8 மணிக்கெல்லாம் காபி கூட குடிக்க விடாமல் கே.என்.நேரு, அவரது தம்பிகள், உறவினர்கள், நண்பர்கள், டெண்டர் எடுத்த காண்ட்ரக்டர்கள் என மொத்தம் 17 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு ஆபரேஷனில் இறங்கி இருக்கிறார்கள். மதிய ரெய்டு முடிந்த பிறகு கதவை திறந்துவிட்டு வெளியில் வந்த நேரு லேசான ஒரு புன்சிரிப்புடன் வந்து ”கடைசியில் ஒரு பைலையும் ஒரு நாலு துண்டு சீட்டையும் தவிர என் வீட்ல வேற எதுவும் அவங்களுக்கு கிடைக்கல” என கேமரா முன் ரொம்ப கெத்தா பேட்டி கொடுத்தார்.

”ஆபீஸ்ல எல்லாத்தையும் எடுத்தாங்க. அவங்களுக்கு ஒன்னும் எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கல. ஆனா ஆபீஸ் சம்பந்தமான ஒருஃபைல் ஒன்னு இருந்தது. அந்த ஃபைல் எடுத்தா அது ரொட்டீன் ஃபைல். அதனுடைய காப்பி ஒன்னு எடுத்துக்கிட்டாங்க. தம்பியினுடைய ஒரு பிட்ல வரவு, செலவு கணக்கு எழுதி இருந்தாரு. அதை எடுத்துக்கிட்டாங்க. எடுத்துக்கிட்டு என்கிட்ட கையழுத்து வாங்கிட்டாங்க. ஆனா பொருள் என்னென்ன இருந்தது. இதுல கையெழுத்து வாங்கிட்டு இப்ப போயிட்டாங்க. அதான் விஷயம்” என்றார்.
ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் விசாரித்த வகையில் ”அட நீங்க வேற.. நடந்ததே வேறங்க” என ஒரு பயங்கர விஷயத்தை உடைத்தார்கள். நேருவின் தம்பியோட கம்பெனிஸ், அவர் அமைச்சராக இருந்தபோது டெண்டர் எடுத்த நிறுவனங்கள், மெட்டீரியல் சப்ளை செய்த ஆட்கள் என சரியாக ஸ்கெட்ச் போட்டு ரைட் ஸ்பாட்ட லாக் செய்து இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாக துறையில் ரோடு, பில்டிங், பார்க், மெட்ரோ வாட்டர் என மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வேலை நடந்திருக்கிறது. இந்த 2.5 லட்சம் கோடியில எம் பண்ட் அதாவது மினிஸ்டர்ஃபண்ட் எனச் சொல்லி அந்த கான்ட்ராக்டர்களிடம் இருந்து வாங்கிய 10% கமிஷனை மட்டுமே கணக்கு போட்டால் ரூ.25000 கோடி வருகிறது.

இதுபோக கீழ்நிலை ஊழியர்களிடம் இருந்து, டாப் லெவல் அதிகாரிகள், கவுன்சிலர்கள், தொகுதி எம்எல்ஏக்கள் என எல்லாருக்கும் 15% கமிஷந் கணக்கு போட்டால் மொத்தம் 37ஆ000 கோடி ரூபாய் கமிஷன் மட்டுமே கைமாறி இருக்கிறதாம். நகராட்சி, மாநகராட்சி கமிஷனர்கள் மட்டுமே கடந்த 2021ல் இருந்து 2020 வரையிலான இந்த ஐந்து ஆண்டுகளில் ஆளுக்கு 300 கோடியில் இருந்து 1000 கோடி ரூபாய் வரைக்கும் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்களாம். இதில் தெருவிளக்கு, குப்பை அள்ளுகிற கணக்கெல்லாம் சேர்க்கவே இல்லை. அதையும் சேர்த்தால் கணக்கு எங்கேயோ போகும்.

இந்த ரெய்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் நேருவை நேரில் கூப்பிட்டு விசாரணை, கைது என லஞ்ச ஒழிப்பு துறை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும். திமுகாவுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட் ஆகிவிட்டது. ஏனென்றால் வரப்போகிற நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு முன் திமுக ஆட்சியில் இந்த துறையில் நடந்த ஊழல்களை இஞ்ச் பை இஞ்சாக அம்பலப்படுத்த சிஎம் விஜய் மேலிடத்திலிருந்து ஆர்டர் போட்டாராம். அதுவும் இல்லாமல் இப்போத நகராட்சி நிர்வாகத்ததுறையை முதலமைச்சர் விஜயே தனது கையில் வைத்திருப்பதால் நடவடிக்கை ரொம்பவே ஸ்பீடாக இருக்கும் என பேசிக் கொள்கிறார்கள். இதோட ரியாக்சன் திங்கட்கிழமை அன்று சட்டப்பேரவையில் தெரியும் எனச் சொல்கிறார்கள்.
