Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தும், இதுநாள் வரை ஆட்சி அமைக்க முடியாம்ல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தள்ளாடி வருகிறார்.

இது குறித்து அரசியல் விமர்சகர் முரளி சீதாரமன் கூறுகையில், “திமுகவை எதிரியாக அறிவித்து அரசியல் செய்து வீழ்த்திய விஜய், ஆட்சி அமைப்பதற்கு திமுக- வின் எதிரியான அதிமுகவிடம் தானே முதலில் ஆதரவு கேட்டிருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க விடாமல் விஜய்யை கட்டிப் போட்டிருப்பது யார்? ரெண்டு சீட்டு வைத்திருக்கும் உதிரி கட்சியிடம் கூட கையேந்தி நிற்பதை விரும்பும் விஜய் அதிமுக-விடம் பேசியிருந்தால் எப்போதோ பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் அல்லவா? விஜயின் பின்னாலிருந்து இதை தடுப்பது யார்? மிஷனரிகளா? இந்த இந்த கோணத்தில் யாரும் ஏன் சிந்திப்பது இல்லை.

விஜய்யின் வெறிபிடித்த ரசிகர்கள் வேண்டுமானால் பலர் தற்குறிகளாக இருக்கலாம். ஆனால் விஜய்யை பின்னிருந்து இயக்குபவர்கள் எவரும் ‘தற்குறி’ அல்ல. அவர்களுக்கு என்று தெளிவாக ஒரு அஜெண்டா இருக்கிறது. ஆதரவு கேட்க அவர்கள் 47 சீட் வைத்துள்ள அதிமுகவை அணுகாமல் 5 சீட் வைத்துள்ள காங்கிரசை ஏன் அணுகினார்கள்? இப்போதும் ஏன் தலா 2 சீட் வைத்துள்ள சிபிஐ, சிபிஎம், விசிக ஆகியவற்றை அணுகுகிறார்கள்?

08+5 = 113 இப்போது ஆன நிலையில் கூட இன்னமும் இன்னமும் 5 சீட்டுக்கு அவர்கள் ஏன் பாமக 4 அமமுக 1 என்று போகவில்லை? ஏன் சிபிஐ, சிபிஎம், விசிக என்ற கணக்கில் போகிறார்கள்? 47 சீட் வைத்துள்ள அதிமுகவை அணுகி துணை முதல்வர் பதவி, காபினெட்டில் வலுவான இலாகா என்று பேரம் பேச தவெக ஏன் முன் வரவில்லை?

விஜய்யை பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்புவது தெளிவான ஹிந்து விரோதிகளை மட்டுமே. அதில் அவர்கள் இவ்வளவு பலவீனமான நிலையிலும் தெளிவாக இருக்கிறார்கள். சிபிஐ, சிபிஎம், விசிக என்பது விஜய்யின் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள் விரும்பும் அணி சேர்க்கை.

தெளிவான மோடி எதிர்ப்பாளர்கள், தெளிவான ஹிந்து மத விரோதிகள் – இவர்களின் ஆதரவு சொற்பமாக இருந்தாலும் திடமாக இருந்தால் போதும் என்பதில் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago