”காலை ஜப்பானில் காஃபி… மாலை நியூ யார்க்கில் கேப்ரே… இரவில் தாய்லாந்தில் ஜாலி… இனிமேல் நமக்கென்ன வேலி.. இங்கும் எங்கும் நம் உலகம்..”- கமல்ஹாசன் நடித்த இந்தப் பாடல் ஒரு காலத்தில் செம்ம ஹிட். இப்போது வரை இந்த பாட்டோட வரிகள் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த வரிகள் செம்ம ஹிட். இந்த பாடலுக்கும் இந்த கிரைமுக்கும் 100% கனெக்ட் இருக்கிறது. இந்த பாட்டோட வரிகளை அப்படியே தன்னோட நிஜ வாழ்க்கையில 100% வாழ்ந்து பார்த்த ஒரு அதிபரோட நிலை இன்னைக்கு என்னவா இருக்கு?
பணம், அதிகாரம், செல்வாக்கு இது மூணும் ஒருத்தன்கிட்ட எல்லை மீறி போச்ச்சுன்னா அவன் தன்னை இந்த உலகத்தோட ராஜாவாவே நினைக்க ஆரம்பிச்சிருவான். அப்படி தன்னோட பணபலத்தால் அரசாங்கத்தையும், சினிமா உலகத்தையும், தன்னோட காலடியில வைத்திருந்த ஒரு ஆளோட கதைக்கு இப்போ இறுதி முடிவுக்கு வந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி திடீரென ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது என்கிற ஒருவரிசெய்தி வெளியானபோது ஒட்டுமொத்த தொழில் உலகமும் அதிர்ந்து போனது. சின்ன சின்ன வழக்குகளில் கோர்ட்டுக்கு வருகிற அந்த சாதாரண குற்றம் செய்தவர்களை கூட தேடி தேடி படம் பிடிச்சு வீடியோக்களாக போடுற ஊடக கூட்டத்தோட முற்றுகையோ, ஒரு சிறு கைது காட்சியோ கூட இல்லாமல் ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என காட்சி ஊடகங்கள் கூட கடமைக்கே என இந்த செய்தியை ஒளிபரப்பினார்கள்.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி, அவரோட உதவியாளர் சாந்தி. சாந்தியோட கணவர் மகேந்திர சிங் கண்ணு மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு இப்போது வயசு 84 ஆகிறது. இந்த தள்ளாத வயதில் இவரை போக்சோ சட்டத்தில் தூக்கி ஜெயிலில் போட்டது ஏன்? என பல கேள்விகள் எழும்பி வருகிறது. யார் இந்த ஜெம் கிரானைட் வீரமணி? எப்படி இப்படிப்பட்ட வழக்கில் சிக்கினார்?
தமிழ்நாட்டில கல்குவாரிகள்ல இருந்து கிரானைட் கற்களை எல்லாம் வெட்டி எடுத்து அதை வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ற தொழில்ல பெரும் வெற்றி பெற்றவர்தான் இந்த ஜெம் வீரமணி. கிரானைட்கள் தொழில் தொடர்பான சர்வதேச சங்கங்களில் முக்கிய பொறுப்பில இருந்தவர். இன்னைக்கு 84 வயசுலையும் தன்னுடைய குடும்பத்தினருக்கு சொத்து எல்லாத்தையும் பிரிச்சு கொடுத்தது போக அவர்கிட்ட இருக்கிற சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 5000 கோடி ரூபாய்.
நினைச்ச நேரத்துல எம்ஜிஆர், கலைஞர் போன்ற முதலமைச்சர்களை அப்பாயின்ட்மெண்ட்டே இல்லாமல் நேரடியா போய் பார்க்கிற அளவுக்கு செல்வாக்கு மிக்கவர். இவர்ட்ட டொனேஷன் வாங்காத கட்சிகளே இல்லைன்னு சொல்லலாம். ஒரு சில கட்சிகளை தவிர அப்படிங்கிற நிலையை உருவாக்கினவர். இப்படிப்பட்ட ஜெம் வீரமணிதான் இன்னைக்கு ஜாமீன்லயே வெளிவர முடியாத அளவுக்கு போக்சோ சட்ட கைதியாகி இருக்கிறார். இந்த உயரத்துக்கு ஜெம் வீரமணி எப்படி போனார்? இவ்வளவு பாதாளத்தில எப்படி விழுந்தார் என அவரது ஹிஸ்டரியை எடுத்து பார்த்தால் 1970வது வருஷம் சேலத்தை சொந்த ஊராகக் கொண்ட வீரமணி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரு சாதாரண வக்கீலாக இருந்தார்.

இருந்தாலும் ஏதாவது ஒரு பிசினஸ் செய்யணும் அப்படிங்கறதுதான் அவரோட பெரிய கனவா இருந்தது. சேலத்தில்
இருக்கிற தன்னுடைய நண்பர் சீனிவாசனிடம் அவ்வப்போது மனம்விட்டு பேசுவார். ஒரு கட்டத்துல வீரமணி சேலம் வந்திருந்தப்போ அவர தன்னோட என்பீல்ட் மோட்டார் பைக்ல உட்கார வச்சு சீனிவாசன் ”வா நான் உனக்கு ஒரு ஏத்த பிசினஸ் பத்தி காட்டுறேன்” எனச் சொல்லி வீரமணியை என்பீல்ட்ல ஏத்திக்கிட்டு போய் தர்மபுரிக்கு கூட்டிட்டு போறார். தர்மபுரியில ஒரு கல்குவாரிக்கு வீரமணி அழைச்சிட்டு போன சீனிவாசன் அங்க அவரை ஒரு வேலையிலயும் சேர்த்து விடுறார்.
அதுக்கப்புறம் வீரமணிக்கும், சீனிவாசனுக்கும் லெட்டர் போடுறதோ இல்ல. தொலைபேசியில பேசுறதோ இல்ல. நேர்ல பார்க்கறதோ என எந்தவிதமான தொடர்பும் இல்லாம போயிடுது. சரியா ஒரு வருஷம் கழிச்சு சேலத்தில இருக்கற சீனிவாசன் வீட்டுக்கு ஒரு அம்பாசடர் கார்ல வீரமணி வந்து இறங்குறாரு. அப்போ அம்பாசிடர் ரொம்ப காஸ்ட்லியான கார். ஒரு வருஷத்துக்கு முன்னாடி தன்னோட என்பீல்ட்ல வந்து உட்கார்ந்த வீரமணி இன்னைக்கு அம்பாசிடர் கார்ல வந்து இறங்குனதை ரொம்ப ஆச்சரியமா பார்க்கிறாரு சீனிவாசன்.
அப்ப சீனிவாசன் ”என்னடா ஆளையே காணும்..? எனக் கேட்க அதுக்கு வீரமணி ”என்னை நல்ல வேலையா குவாரில சேர்த்து விட்டீங்க. இன்னைக்கு நான் அங்க ஒரு முக்கியமான ஆளா மாறிட்டேன். எக்ஸ்போர்ட் மேட்டரா வெளிநாடுகளுக்கு பிஸியா போயிட்டு இருக்கேன். காலையில ஜப்பான்ல காபி குடிச்சா சாயந்தாரம் நியூயார்க்ல கேப் டென்ஸ் பார்த்துட்டு டின்னருக்கு அப்படியே தாய்லாந்து வந்துருவேன். அந்த அளவுக்கு நான் இப்போ பிஸி. இப்போ நான் சென்னைக்கு தான் போறேன். நீங்களும் சென்னைக்கு வாங்களேன்” அப்படின்னு சீனிவாசனை கூப்பிடுறார். தன்னோட நண்பர் வீரமணி கூப்பிட்டதை ஏத்துக்கிட்டு சீனிவாசன் அப்பப்போ சென்னைக்கு போவார். சென்னைக்கு போனதுக்கு அப்புறமாதான் வீரமணியோட அந்த லைப் ஸ்டைல் எப்படி இருக்கு அப்படின்னு பார்த்து மிரண்டு போறாரு சீனிவாசன்.

1972ல வீரமணியும் அவருடைய நண்பர் சீனிவாசனும் சென்னை ராதாகிருஷ்ணன் ரோட்ல இருக்கற அந்த புகழ் பெற்ற ஹோட்டல்லதான் தங்குவாங்க. ரூம் நம்பர் 1005லதான் வீரமணி தங்குவாரு. இரண்டு மூன்று ஷூட் ரூம்களைதான் சேர்த்து எடுப்பாங்க. வீரமணிக்காகவே அந்த ரூம் எல்லாம் பிரத்தியேகமா உருவாக்கி வச்சிருப்பாங்க. அப்படிப்பட்ட ஹோட்டல்ல வீரமணி தங்கி இருக்கிறப்போ அவரை சந்திக்க பல சினிமா டைரக்டர்கள் அங்க வருவாங்க.
காரணம் பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம சினிமாவுக்கு பைனான்ஸ் பண்ணாரு. சில பேருக்கு உதவியும் செஞ்சாரு வீரமணி. பெரிய பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் வீரமணியை தேடி அந்த ஹோட்டலுக்கு வருவாங்க. வீரமணி தங்களுக்கு செஞ்ச உதவிக்கு நன்றி செலுத்துவதற்காக தங்களோட படத்துல ஹீரோயின் உட்பட அழகழகான நடிகைகளை ஹோட்டலுக்கு அழைச்சிட்டு வந்து வீரமணிக்கு அறிமுகப்படுத்தி வைப்பாங்க. அந்த நடிகைகளையும் நல்லா கவனிச்சுதான் அனுப்புவாரு வீரமணி. இப்படி வருகிற டைரக்டர்கள் கிட்ட தன்னோட வெளிநாட்டு அனுபவங்களை சில சம்பவங்களை சொல்லிட்டு இருப்பாரு வீரமணி.
அப்படித்தான் பிரபல டைரக்டர் ஒருத்தர் வீரமணிக்கு நன்றி கடன் செலுத்த அப்பப்போ நடிகையோட வருவாரு. அவருகிட்ட ”இன்னைக்கு எனக்கு உடம்பு டயர்டா இருக்கு. என் நண்பன் சீனிவாசன் இருக்கான். அவன்கிட்ட அனுப்பு”ன்னு சொல்லி அந்த பிரபல நடிகையை தன்னுட நண்பனுக்கு அனுப்பி தன்னுடைய நன்றி கடனை தீர்த்துக்கிட்ட கதையும் உண்டு.
இப்படியான அந்த ஹோட்டல் பேச்சின் போதுதான் வீரமணியோட காலை ஜப்பானில் காபி.. மாலை நியூயார்க்கில் கேப்டே ..இரவில் தாய்லாந்தில் டின்னர்.. அப்படிங்கிற அந்த சர்வதேச சல்லாப அனுபவங்களை கேட்டு அதை தன்னோட படத்திலும் பாட்டா வச்சாரு அந்த டைரக்டர். அந்த பாட்டு இப்பவும் செம்ம ஹிட்டா ஓடிட்டு இருக்க ஒரு பாட்டு.
முதலமைச்சர்களோட மதிப்பு மிகுந்த பழக்கம், தன் காலடியில சினிமா இயக்குனர்களை வச்சிருந்தது. சினிமா நடிகைகளோட நெருங்கிய சவகாசம்னு கிரானைட் பிசினஸ் முன்னேற்றத்தினால மண்ணுலயே சொர்க்கத்தை பார்த்து பெரிய வாழ்க்கையை வாழ்ந்தார் வீரமணி. அந்த டைம்லதான் கோபாலபுரம் வீட்டில் முதலமைச்சர வீரமணி பார்க்க போறப்ப இன்றைய முதலமைச்சர் விஜயோட அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் கோபாலபுரம் வீட்டு வாசல்ல ஒரு ஓரமா நின்னுட்டு இருப்பாராம். அப்ப அவருக்கும் சினிமாஃபைனான்ஸ் ரீதியா பேச்சு வார்த்தைகளும் நடக்கும். வயசாக வயசாக வாலிபம் அதிகமாகும்ங்கிறது வீரமணி விவகாரத்தில கரெக்டா பொருந்திருந்துச்சு.
சினிமா நடிகைகளை பார்த்து பார்த்து அழுத்து சலிச்சு போயி அடுத்த கட்டமா சின்ன சின்ன பொண்ணுங்களை தேடுறாரு வீரமணி. இப்படி ஒரு பக்கம் மிக பிரபலமான தொழிலதிபரா வலம் வந்த ஜெம் வீரமணி, அந்தரங்கத்தில சர்வதேச அழகிகளின் ரசிகனா சின்ன சின்ன பெண்களை தேடுற விரமணியா மாறுகிறார். இது எல்லாத்தையுமே நீண்ட காலமாகவே சினிமாவில இருக்கிற ஒரு குரூப் அவருக்கு தெரியாம அதை ஃபாலோ பண்ணிட்டே வந்திருக்கு. சினிமா பைனான்ஸ் விஷயத்துல சிலரோடு வீரமணிக்கு கசப்புணர்வு ஏற்பட்டிருக்கு. அது கூட அந்த குரூப்புக்கு வீரமணி மேல இருந்து அந்த கோபமா மாறி இருக்கலாம்.
அந்த ஒரு குரூப் மட்டுமில்லாம வேறு ஒரு குரூப்பும் அவரை வச்சு பணம் பறிக்கிறதுக்கு பிளான் போட்டு வந்திருக்கு. அவரோட அந்தரங்க மேட்டர்களை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு சில வீடியோக்களையும் எடுத்துடுச்சு அந்த சினிமா குரூப். இத வச்சு வீரமணி கிட்ட பணம் பறிக்கிற வேலையில இறங்குனாங்க. 2019லயே ஒரு வீடியோவை வெளியில விட்டறோம் அப்படின்னு சொல்லி வீரமணி கிட்ட பணம் பரிச்சாங்க.
ஒரு கட்டத்துல அதையும் தன்னோட அதிகார பலத்தால ஆப் பண்ணாரு ஜெம் வீரமணி. இந்த பின்னணியில 2025 அக்டோபர் ஆறாம் தேதி அன்னைக்கு வீரமணி மேல ஒரு பென்டிரைவோட ஒரு புகார் வந்துச்சு. அந்த புகார் சென்னை விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி கிட்ட அனுப்பப்படுது. அந்த பென்டிரைவ்ல வீரமணி தன்னோட உதவியாளரான சாந்தியோட வீட்டில வச்சு ஒரு மைனர் பொண்ணோட இருக்கிற வீடியோ இருந்திருக்கு. முதல்ல அந்த வீடியோல இருக்கிறது யாருன்னே போலீஸாருக்கு தெரியல. அதுக்கு அப்புறம்தான் அது தொழிலதிபர் ஜெம் வீரமணி அப்படின்னு தெரிஞ்சுக்கிறாங்க.
அந்த புகார் கொடுத்தவனை கூப்பிட்டு விசாரிச்சப்போ அவன் முன்னுக்கு பின் முரணா தகவல்களை சொல்லி இருக்கான். அதுமட்டுமில்லாம பாதிக்கப்பட்ட பெண்ணோட புகாரோ இல்ல. வாக்கு மூலமோ எதுவுமே இல்லை. அதனால அந்த பென்டிரைவ் அடிப்படையின் மேல் நடவடிக்கை எதுவுமே எடுக்காம கேஸ் அப்படியே கக்ளோஸ் பண்ணிடுறாங்க. அதுக்கு அப்புறமா தவெக ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறமா சென்னை மாநகர கமிஷனரா அமல்ராஜ் பொறுப்பேற்ற பிறகு புகார் கொடுத்த அதே குரூப் கமிஷனர் அமல்ராஜை போய் பார்க்கறாங்க.
அதுக்கப்புறம் கோர்ட்டுக்கு போய் கேஸ் போடுறதுக்கு ஒரு ஆர்டர் வாங்கிட்டு வந்தாங்க. அதன் பிறகு ஆகஸ்ட் மாசம் அந்த பென் டிரைவோட சேர்த்து இன்னும் கூடுதலான தகவல்களையும் கொடுக்கறாங்க. உடனே சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச்சுக்கு இதை ஃபார்வர்ட் பண்றாரு கமிஷனர். இதோட அடிப்படையில வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் இந்த மூணு பேரையும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்னைக்கு தூக்கி போலீஸ் கைது பண்றாங்க. அரசியல், சினிமா துறையை சேர்ந்த பலர் வீரமணி கிட்ட பணம் கேட்டு பிளாக்மெயில் பண்ணதாவும், அதுல வந்த முரண்பாட்டாலதான் இந்த பென்டிரைவ் வீடியோ போலீஸுக்கு போயிருக்கும் எனவும் சொல்றாங்க.

அதுமட்டுமில்லாம போக்சோ கேஸ் போடுறதுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணோட வாக்கு மூலமே இல்லை. அவங்க எங்க இருக்காங்க? இப்போ அதனால பாதிக்கப்பட்ட பெண் லைவ்ல இருக்காங்களா இல்லையா? யாரு கூட்டிட்டு வந்தாங்க? என்கிற எந்த விபரமும் இல்லை. ஒரு சோசியல் ஒர்க்கர் கொடுத்த அந்த பென் டிரைவை மட்டும் வச்சுக்கிட்டு எப்படி கேஸ் போட்டு கைது பண்ண முடியும்? என போலீஸ் வட்டாரத்திலே கேள்விகள் எழும்புது. ஆனாலும் இந்த கைதோட பின்னணியில் வேறு ஒரு பிளானும் நடந்திருக்கிறதா தகவல்கள் கசிகிறது. வீரமணிக்கு ஈசிஆரில் 90 ஏக்கருக்கு மேல நிலங்கள் இருக்கு. அதோட மதிப்பு இன்னைக்கு பலாயிரம் கோடி ரூபாய்.
அந்த நிலத்தை கைப்பத்துறதுக்காக இப்போதை முதலமைச்சருக்கு ரொம்ப நெருக்கமானவங்களில் ஒருத்தரான நீல நிற கடவுள் பெயரை கொண்ட ஒருத்தரும் அம்மாவோட தங்கை உறவை சொல்ற வார்த்தையை கொண்ட இன்னொருத்தரும் சேர்ந்து பிளான் பண்ணதாகவும் அதுக்கான அடித்தளமா அமைஞ்சதுதான் இந்த ஏழு வருஷத்துக்கு அப்புறம் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை என பேசிக்கொள்கிறார்கள். கற்களை வெட்டி பெரிய சொத்துக்களை சேர்த்த வீரமணி அந்த பலத்தை முறை தவறி மைனர் பொண்ணுங்க கிட்ட காட்டுனதுனாலதான் இன்னைக்கு ஜெயிலுக்கும் போற நிலைமை உருவாகி இருக்கு.
இவ்வளவு பெரிய பொலிட்டிக்கல், சினிமா, பிசினஸ் பேக்ரவுண்ட் இருக்கறதுனாலதான் இவரோட விரச வரலாற்றை பற்றி பிரபல மீடியாக்கள் கூட எதுவுமே தொட்டும் தொடாமல்… பட்டும்படாமல் செய்தியாக்கி மறைச்சிட்டாங்க. நினைத்தாலே இனிக்கும்னு சொல்லுவாங்க. ஆனா புழல் ஜெயிலுக்குள்ள உட்கார்ந்து தன்னோட பழைய நினைவுகளை யோசிச்சு பார்த்தா நிஜமாவே வீரமணிக்கு நினைத்தாலே கசக்கும். காலையில ஜப்பான்ல காபி, மாலையில நியூயார்க்ல கேப்ரே… இரவுல தாய்லாந்துல டின்னர்ன்னர்னு வாழ்ந்த ஜெம் வீரமணிக்கு இன்னைக்கு மூணு வேளையும் புழல் ஜெயில் சாப்பாடுதான் கதிங்கிறது காலத்தோட விளையாட்டு.
அதுமட்டுமில்ல. இவரோட சொத்துக்களை குறி வச்சு இப்போ இவரை டார்கெட் பண்ணவங்களோட திருவிளையாட்டும்தான். முதலமைச்சர் விஜய் இதுல சரியான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
