ஆன்மிக நம்பிக்கை, மன உளைச்சலை முதன்மையாக வைத்துத் தனியாட்களும், போலி ஜோதிடர்களும் நடத்தும் பலவகை மோசடிகள் இணையத்திலும் சமூகத்திலும் அதிகரித்து வருகின்றன. ‘தோஷம் நீக்கும் பூஜை’, ‘நிர்வாண வழிபாடு’, ‘கெட்ட ஆவி விரட்டும் சடங்கு’ என்ற பெயரில் எவ்வித சாஸ்திரப் பின்னணியும் இல்லாத மனிதர்கள் அப்பாவி மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திப் பணம் பறிப்பதோடு, கடுமையான பாலியல் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகின்றனர். முன் பின் தெரியாத நபர்களிடம் நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பகிர்வதும், மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதும் பேராபத்தில் முடிவடையும் என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கனடாவை சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி, நிர்வாண பூஜை நடத்துவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரில் சென்னையை சேர்ந்த ஜோதிடரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் வசிக்கும் இலங்ககையை தமிழரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் கனடா பெண்ணை வைத்து நிர்வாண பூஜை – ஜோதிடர் கைது பின்னர் அவரை பிரிந்துள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பெசண்ட் நகர் கடற்கரைக்கு சென்றபோது, ஜோதிடர் இசக்கி முத்துவை சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஜோதிடர் கூறியதால் அவர் மீது அந்த பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜோதிடம் பார்ப்பதற்காக ரூ70 ஆயிரம் கட்டணமாக செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஜோதிடர் இசக்கி முத்து நிர்வாண பூஜை செய்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் எனக்கூறி கனடா பெண்ணிடம் மேலும் 20 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். தொடர்ந்து அடிக்கடி அந்தப்பெண்ணை தொடர்பு கொண்டு அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பெயரில் மாம்பலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குற்றாலத்தில் பதுங்கியிருந்த தென்காசியை சேர்ந்த ஜோதிடர் இசக்கி முத்துவை கைது செய்த போலீஸார் சென்னை அழைத்து வந்தனர். சென்னை தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு பெண்களிடமும் மோசடி நடத்தி இருக்கிறாரா? எப்படியெல்லாம் மோசடி நடத்தி இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
