Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

chennai

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவுடி சாகுல் அமீது (27). இவர் மீது கொலை, கொலை மிரட்டல், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் கே.எஸ்.எஸ் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் கொடூரமான முறையில் சாகுல் அமீது கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அருண் (31), ஸ்ரீகாந்த் (35), சூர்யா (32), அப்துல் ரகுமான் (25), அஜய் (25) ஆகிய 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்: சாகுல் அமீதும், நாங்களும் நண்பர்களாக இருந்தோம். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாகுல் அமீதை அரிவாளால் வெட்டியதால், எங்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு சாகுல் அமீது, எங்களை போட்டுத்தள்ள திட்டமிட்டது தெரியவந்தது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த சாகுல் அமீது கடந்த 27-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையும் படியுங்க  ஆதவ், மரியவில்சன் போன்ற பெரும் பணக்காரர்களுக்கு கார் எதுக்கு? எதிர்க்கட்சிக்கு கொடுக்கும் லஞ்சமா? விஜய்யை விளாசும் சீமான்!

கடந்த சனிக்கிழமை மாலை அவரை தேடி வீட்டுக்கு சென்றோம். அவர் அங்கு இல்லாததால் வழக்கமாக மது அருந்தும் இடங்களில் தேடினோம். இரவு சுடுகாட்டில் போதையில் படுத்திருந்த சாகுல் அமீதை அரிவாளால் சல்லி சல்லியாக வெட்டிக்கொன்றோம் என தெரிவித்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். ஜாமீனில் இருந்து வெளியே வந்த 2-வது நாளிலேயே சாகுல் அமீது கொலை செய்யப்பட்ட்டது குறிப்பிட்டத்தக்கது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago